கேஸ் சிலிண்டர் ரூ.200 நாங்க குறைச்சாச்சே.. திமுக வாக்குறுதி நம்பர் 503 என்ன ஆனது? - அண்ணாமலை கேள்வி!
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பதற்கும் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5 மாநில தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோதும் விலையை அதிகரித்து வந்த பாஜக அரசு, தேர்தலையொட்டி இப்போது மக்களை ஏமாற்ற நினைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
சிலிண்டர் ஏன் சிவப்பு கலரில் இருக்கு? நீலம், மஞ்சள் எதுக்கு? மக்கள் அறிய வேண்டிய நிறய குறியீடுகள் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications