புகார் கூறியவர்கள் மீதே நடவடிக்கை? அதிகார திமிரில் ஆடியோர் இருந்த இடம் தெரியவில்லை.. அண்ணாமலை ஆவேசம்
சென்னை: ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய ஒப்பந்தம், இன்று வரையில் நடைபெறாமல் இருப்பதால், பெரும் முதலீடு செய்துள்ள நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், அவரது உதவியாளர்களும், பல உணவக உரிமையாளர்களிடம் லஞ்சம் வசூலித்து, அவர்கள் உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதியாக, இந்த ஒப்பந்தங்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.
இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலைகளில் உணவகம் நடத்தி வந்தவர்களும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து பலமுறை அமைச்சரையும், அதிகாரிகளையும் தொடர்பு கொண்டும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஒரு ஊடகவியலாளர் வாயிலாக, இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் உணவக உரிமையாளர்கள் எழுப்பியிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அந்த உணவகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளார். இரண்டு உணவகங்களின் உரிமங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
லஞ்சம் வாங்கிய உதவியாளர்கள் மீதும், ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தள்ளிப் போடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் அமைச்சரின் இந்த முடிவு, 'அமைச்சர் உள்ளிட்டோர் தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்க வேண்டும், அவற்றைப் பொதுவெளியில் சொன்னால், புகார் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்போம்' என்று, அனைவருக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே தெரிகிறது.
ஏற்கனவே ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் உணர்ந்தால் நலம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications