தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை தொட்டு பார்க்கட்டும்.. தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முடிந்தால் என்னை திமுக அரசு கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை நான் மிரட்டி பணம் பறித்து வருவதாக என் மீது திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

நான் அது போல் எல்லாம் செய்யவில்லை. ஒரு வேளை நான் அது போல் மிரட்டி பணம் பறித்தேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

நான் இவர்களை போல நோட்டீஸ் அனுப்பிக் கொண்டு இருக்க மாட்டேன். அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் இந்த சென்னை கமலாலயத்தில்தான் இருப்பேன். தைரியம், திராணி இருந்தால் முடிந்தால் என்னை கைது செய்யட்டும். ஒரு வேளை உங்களிடம் (திமுக) ஆதாரம் இல்லாவிட்டால் இனி நீங்கள் சொல்வதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

கைது

கைது

நீங்கள் என்னை கைது செய்யாவிடில் மக்களிடம் மாட்டிக் கொள்வீர்கள். பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் என்னிடம் 500 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது போல் முதல்வரின் துபாய் பணம் குறித்து நான் பேசியதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ரூ 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எம்பி வில்சன்

எம்பி வில்சன்

இது போதாததற்கு எம்பி வில்சன் என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் தான் இருக்கு. என்னிடம் ரூ 610 கோடி இல்லை. தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டு பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார். என்னிடம் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை.

அண்ணாமலை சவால்

அண்ணாமலை சவால்

எனவே நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என்னை கைது செய்யட்டும் என சவால் விடுத்தார் அண்ணாமலை. அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்தால் பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழக அரசு தொட்டு பார்க்கட்டும் என சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+