தாடியை கிளீன் ஷேவ் செய்து ஆளே மாறிய அண்ணாமலை! பாத யாத்திரை நிறைவு எஃபெக்ட்!
சென்னை: கடந்த 6 மாதங்களாக தாடியுடன் வலம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இப்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் தாடியை கிளீன் ஷேவ் செய்து பழைய அண்ணாமலையாக மாறியிருக்கிறார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி அன்று பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை தமிழகமெங்கும் பயணித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தனது யாத்திரையை நிறைவு செய்தார். அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற யாத்திரை நிறைவு விழாவில் மோடி கலந்துகொண்டார்.

ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் நடைபயணமானது ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் நிறைவடையும் வகையில் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டது. இடையே மழை வெள்ளம், கூட்டணிக் கட்சியுடன் மோதல், அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு உள்ளிட்ட இன்னும் பல்வேறு காரணங்களால் பாத யாத்திரையை திட்டமிட்டப்படி ஜனவரி இரண்டாவது வாரத்தில் நிறைவு செய்ய முடியவில்லை.
மொத்தம் 168 நாட்கள் நடைபயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. பாத யாத்திரையில் இருந்ததால் தாடியை கிளீன் ஷேவ் செய்யாமல் எடுத்த சபதம் முடிக்காமல் ஓயமாட்டேன் என்கிற வகையில் அண்ணாமலை காட்சியளித்தார். இப்போது என்னவென்றால் தாடியை பளிச்சென்று கிளீன் ஷேவ் செய்து பழைய அண்ணாமலையாக மாறிவிட்டார். தனது புதிய தோற்றத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, திமுகவின் முன்னாள் அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் குறித்து அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார். போதை வஸ்துவிலேயே மிகவும் மோசமானது சிந்தடிக் போதை வஸ்து தான் என்றும் ஆனால் அந்தப் பொருளை ஜாபர் சாதிக் உற்பத்தி செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக சாடியுள்ளார்.
திமுகவில் கட்சிப் பொறுப்பை பயன்படுத்தி தனது அயலக நெட்வொர்க் மூலம் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருக்கிறார். போதைப்பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் அரசு செயலிழந்து விட்டதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications