சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாத்தா அப்டி சொன்னாரு, பேரன் இப்டி சொல்றாரு! உதயநிதியை கருணாநிதியோடு ஒப்பிட்டு அண்ணாமலை சொன்ன நீதி

Google Oneindia Tamil News

சென்னை: பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் லால் சிங் சத்தா இந்தி திரைப்படத்தை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவதை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடித்து இருக்கும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்டு 11 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆமிர் கான், நாக சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள் மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்

உதயநிதியிடம் கேள்வி

உதயநிதியிடம் கேள்வி

இந்த நிகழ்வுக்கு வருகை தந்தை உதயநிதி ஸ்டாலினிடம், "இந்தியை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்தி படத்தை வெளியிடுவதால் வரும் எதிர்ப்புகளை எப்படி சந்திப்பீர்கள்?" என்று ஒரு செய்தியாளர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் "இந்தி தெரியாது போடா என்பது எப்போதுமே இந்தி திணிப்புக்கு எதிரான ஒன்றுதான்.

உதயநிதி பேச்சு

உதயநிதி பேச்சு

இந்தி மொழியை கற்கக்கூடாது என்று நாம் எப்போதுமே சொன்னது கிடையாது. உங்களை தேவைப்பட்டால் நீங்கள் அதை கற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று யாராது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இது ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் இந்தி திரைப்படம்.

ஏன் இந்த படம்?

ஏன் இந்த படம்?

எனக்கு அமீர் கானின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். லால் சிங் சத்தா திரைப்படத்தில் நிறைய இந்திய வரலாறு பேசப்பட்டு உள்ளது. நானும் அமீர் கானும் இந்திய வரலாறு குறித்து அதிகம் பேசினோம். இதை ஒரு ரசிகருக்கான தருணமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தெலுங்கு படத்தையும் வெளியிட்டு உள்ளோம்." என்றார்.

அண்ணாமலை ட்வீட்

அண்ணாமலை ட்வீட்

இதுகுறித்து ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார்.
அதில், "தாத்தா & தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்: எந்த வடிவில் இந்தி வந்தாலும் தமிழ்நாட்டில் அதை அனுமதிக்க மாட்டோம்.

பேரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்: தமிழ்நாட்டில் ஆமிர் கானின் இந்தி படமான லால் சிங் சத்தாவை நாங்கள் வெளியிடுகிறோம்.

நீதி: அரசியலை விட வணிகமே முதன்மை பெறுகிறது." என்றார்.

English summary
Annamalai criticise Udhayanidhi Stalin for distributing Laal singh chaddha Hindi film:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X