அரசியல் சாசனத்திற்கு மோடி தலைவணங்கிய விவகாரம்! போகாத ஊருக்கு வழி தேடாதீர் முதல்வரே! அண்ணாமலை தாக்கு
சென்னை: பிரதமர் மோடியை அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கச் செய்ததே இந்தியா கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் நிர்வாக தோல்விகளையும் ஆட்சியின் தோல்விகளையும் மறைத்து மக்களுக்கு தேவையே இல்லாத விஷயங்களை கொண்டாடுவதை திமுக வழக்கமாக கொண்டிருக்கிறது.

அது போன்ற ஒரு கொண்டாட்டம் (முப்பெரும் விழா) நேற்று நடந்த போதுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின், 40-க்கு 40 பெற்றதை தார்மீக வெற்றி என்றும் வரலாற்ற வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். துண்டு சீட்டில் பிறர் எழுதி கொடுப்பது உண்மையா என்று கூட தெரியாமல் முதல்வர் அப்படியே பேசி விடுகிறார்.
குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மதிப்பு கொண்டவர். ஆனால் அரசியலமைப்பை ஏதோ பிரதமர் இப்போதுதான் நினைவில் கொண்டு வணங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது முரணானது. பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தலை வணங்க செய்ததே இந்தியா கூட்டணிதான் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை முறை குறித்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதை குறித்தும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமையாகும். ஆனால் இந்தியா கூட்டணிக்கு அந்த அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் துண்டு காகிதம்தான். அதனால்தான் எப்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி , நாடு முழுவதும் சந்தர்ப்பவாதிகள், வாரிசுகள், ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு அமைப்பாகும். அவர்கள் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பாஜக மட்டும் தனித்து பெற்ற இடங்களை கூட 13 கட்சிகளை கொண்ட கூட்டணியால் மொத்தமாக வாங்க முடியவில்லை.
13 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி மொத்தமாக 232 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த எண்ணை கூட இந்தியா கூட்டணியால் நெருங்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி தேடுவது என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அது போன்றதொரு உலகில் முதல்வர் ஸ்டாலின் தனது தார்மீக வெற்றியை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தப்பு செய்த குற்றவாளிகள் தெருக்களில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினோ, சமூகவலைதள பதிவுகளுக்காக நள்ளிரவில் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்படுத்தாத போதே முதல்வர் ஸ்டாலின் அரசியல் சாசனத்தை முற்றிலும் அலட்சியப்படுத்துவது தெரிகிறது.
புதிய காரணங்களை கூறி கொண்டாடுவதற்கு பதில் கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாத தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போதாவது அதில் அக்கறை செலுத்தினால் தமிழகம் நன்றாக இருக்கும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவால் தனித்து அரசமைக்க முடியாத நிலையை இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது. திமுகவின் கொள்கை கூட்டணியாலேயே 40 தொகுதிகளிலும் வென்றோம். பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது பிரதமர் மோடியின் தோல்வி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் கூட்டணியால்தான் மோடியால் பிரதமராக பதவியேற்க முடிந்தது. மோடி பதவியேற்ற போது அரசியலமைப்பு சாசனத்தை வணங்க வைத்தது இந்தியா கூட்டணிதான் என பேசியிருந்தார். இந்த கருத்துக்குத்தான் அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications