விளையாட்டை விளையாட்டா பார்க்கணுமா? அப்போ சனாதன தர்மத்தை ஏன் ஒழிக்கணும்? உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்த வெற்றியை பதிவு செய்யும் வகையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நேற்று நடந்தது.

Annamalai criticises Udhayanidhi Stalin

இரு தரப்பிற்கும் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் போக்கு கடுமையாக இருக்கும் என்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். முதலில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் ரன்களை எடுத்த நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிங்கிள் டிஜிட்டில் ரன்களை விளையாடி ஆட்டமிழந்தனர். இதனால் 192 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி ஆரம்பமே அதிரடியாக விளையாடியது.

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களை தண்ணீர் குடிக்க வைத்தார். இந்த நிலையில் இந்த போட்டியின் போது பல சமயங்களில் ரசிகர்கள் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் அவுட் ஆன போது ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது.

இது பலருக்கு விமர்சனங்களை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் இது தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரருக்கு எதிரான அணுகுமுறையை ஏற்க முடியாது.

விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமே தவிர வெறுப்பாக பார்க்க முடியாது என தனது பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தால் தர்மத்தை தர்மமாகதானே பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+