அண்ணாமலையே.. நீ போற இடமெல்லாம் விடமாட்டோம்.. சிவகங்கை பாஜகவை விரட்டி விரட்டி வர்றது யார் பாருங்க
சென்னை: அதிமுக - பாஜக இடையேயான விரிசல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது.. குறிப்பாக, அண்ணாமலைக்கு எதிரான முழக்கங்களை அதிமுக கையில் எடுத்துள்ளது.. என்ன நடக்கிறது இரு கட்சிகளுக்கு இடையில்?
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இவர்கள் 2 பேருக்கும் இடையிலான வார்த்தை போர்கள் பல மாதங்களாகவே நீடித்து வருகிறது.

அண்ணாமலை: பேரரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை "இந்துத்துவத் தலைவர்" என்று அண்ணாமலை கூறியிருந்தது, மிகப்பெரிய அதிர்வலையை அதிமுகவுக்குள் ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததைப் போலவே அதிமுகவிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வெளியாகியிருந்தன.
இந்த எதிர்ப்பானது, லோக்சபா தேர்தலின் பிரச்சாரங்களின்போது அதிகரித்தது.. "ஜூன் 4-க்கு பிறகு அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்றும் பார்ப்போம். எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது? எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது? என்பதையும் பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாகத்தான் எரியும்" என்று அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்திருந்தார் அண்ணாமலை
அண்ணாமலை: அதுமட்டுமல்ல, "2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது.. 4வது இடம்கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. அதிமுகவை இப்போது தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்" என்பது முதல் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தது வரை சர்ச்சைக்குரிய நிறைய கருத்துகளை அண்ணாமலை தெரிவித்துள்ளது, அதிமுகவுக்குள் மீண்டும் கொதிப்பை தந்து கொண்டிருக்கிறது.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை காட்டமாக தந்து கொண்டிருக்கிறார்கள்.
உதயகுமார்: அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் அண்ணாமலை பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியிருந்தார்..
"நண்டு கொழுத்தால் வளையில் தங்காது" என்ற பழமொழிக்கேற்ப அண்ணாமலை செயல்படுவதாகவும், பதவி வெறியால் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் அண்ணாமலை பேசி வருவதாகவும் விமர்சித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, மனநலம் பிறழ்ந்து பேசி வருவதாகவும் அண்ணாமலையை ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே, அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதிமுகவினர் கண்டன போஸ்டர்களையும் ஒட்ட துவங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கருப்புக்கொடி: அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அதிமுக பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம்" என்று எச்சரிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications