அண்ணாமலை மேல இருந்த மரியாதையே போச்சு.. எடப்பாடிக்கு 4வது இடம் தான்! பெங்களூர் புகழேந்தி அட்டாக்
சேலம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்ற பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் அண்ணாமலைக்கு நல்ல மரியாதை இருந்த நிலையில், அதை போட்டு உடைத்துவிட்டார் எனவும், தனது பேரை அண்ணாமலை கெடுத்துக் கொண்டார் என பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.
சேலத்தில் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அண்ணாமலை பேசியதை பல இடங்களில் புகழ்ந்து பேசி உள்ளேன். பாஜகவிற்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிறதோ? என தெரியவில்லை. ஆனால் அண்ணாமலைக்கு மரியாதை இருக்கிறது.
ஆனால், நேற்றைய தினம் அண்ணாமலை தடுமாறினார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த வீடியோ இது. பாஜக தன்மானத்துடன் இருப்பதாகவும், யாருக்கும் அடிபணிந்து செல்லமாட்டோம் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிருந்தால் நான்காவது இடத்திற்கு அதிமுக செல்லும் என்று அண்ணாமலை இதற்கு முன்பாக கூறியிருந்தார்.

பெங்களூர் புகழேந்தி
தற்போது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு மோசமாக எடப்பாடி பழனிச்சாமியை பேசிவிட்டு, தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவேன் என்று பேசுவது தவறானது. மக்கள் மத்தியில் அண்ணாமலைக்கு நல்ல மரியாதை இருந்த நிலையில், அதை போட்டு உடைத்துவிட்டார்; தனது பேரை அண்ணாமலை கெடுத்துகொண்டார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லியதால் தான்; தமிழக பாஜக தலைவர் பதவிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
அண்ணாமலை
மீண்டும் அண்ணாமலை தலைவராக முயற்சி மேற்கொண்டாலும், எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் விடமாட்டார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், பதவிக்காகவும் தான் அண்ணாமலை பேசியிருப்பதாக கருதுவதாக சிலர் சொல்கின்றனர். தன்னை அண்ணாமலை மாற்றிக் கொள்வார் என்று நான் கருதவில்லை. பதவியை துறந்துவிட்டு வாருங்கள் மக்கள் உங்களை மதிப்பார்கள். வடக்கில் இருந்து ஏராளமான தலைவர்கள் தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக ஆட்சிக்கு வராது. அதிமுக பாஜகவிற்கு பின்னாடி சென்று விட்டது.
விஜய் கட்சி
பாஜக பின்னால் விஜய் செல்லவில்லை. கொள்கை ரீதியான எதிரி பாஜக என்று விஜய் கூறியுள்ளார். முதல்வர் குறித்து விஜய் பேசியது தவறு. அதை தவிர்த்து பிற வார்த்தைகளை பார்த்தால் தவறு இல்லை. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில், கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. எழுச்சிக்காக வந்த மக்கள் கூட்டம். குறைத்து விஜயை மதிப்பிட முடியாது. அண்ணா,பெரியார்,எம்ஜிஆர் போன்றவர்கள் பேனர்கள் விஜய் மாநாட்டில் பார்த்தோம். ஆனால் அவர்கள் புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி காண்பிப்பதில்லை.
எடப்பாடி பழனிச்சாமி
தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஒரு வார்த்தை கூட விஜய் பயன்படுத்தவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அணி நான்காவது இடத்திற்கு செல்லும். மூன்றாவது இடத்திற்கு சீமானிற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான் போட்டி. அதிலும் சீமான் தான் மூன்றாவது இடத்திற்கு செல்வார். திமுகவிற்கும்,தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டியை தவிர, எடப்பாடி பழனிச்சாமி அங்கு வேலையில்லை.
தமிழ்நாடு அரசியல்
எதை செய்தாலும் நான்காவது இடத்தை தாண்டி, மூன்றாவது இடத்திற்கு அதிமுக வரவே முடியாது. திமுக பற்றி குற்றம்சாட்டி விட்டு, சசிகலா வீட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறார். வெளியே வராமல் எவ்வாறு அரசியல் செய்யமுடியும். நடிகர் விஜய் எவ்வாறு ஆட்சி அமைப்பார் என்று என்டி ராமராவ், எம்ஜிஆர் போன்றவர்கள் சரித்திர சாதனைகள் படைத்தார்கள். அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கும்.. எழுச்சிமிகு கூட்டத்தை பார்த்து பிறகு, அதை சாதாரணமாக எடைபோட முடியாது. இது அபாய மணி... விஜயின் மாநாட்டில் எழுச்சிகூட்டம்; பாஜக கூட்டணி அணிக்கு அபாய மணி" என்றார்.












Click it and Unblock the Notifications