நான் ஒரு பில் கேட்டேனே, என்னாச்சு! அடுத்த விஷயங்களுக்கு தாவினால் எப்படி? செந்தில் பாலாஜி அட்டாக்

வாட்சுக்கான பில்லை கேட்டேன், அதை கொடுக்கவில்லை, ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு தாவினால் என்ன சொல்வது என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரபேல் வாட்சுக்கான பில்லை கேட்டேன், அதை கொடுக்கவில்லை. அதைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு தாவினால் என்ன சொல்வது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இருவரும் பல்வேறு விஷயங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள். திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை உருவாக்க அண்ணாமலை இப்படி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் தமிழகத்தில் பாஜக என்றுமே வளர்ச்சி பெறாது என திமுகவும் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வந்தன. இந்த நிலையில் அண்ணாமலையில் கையில் கட்டியிருக்கும் வாட்சின் விலை ரூ 4 லட்சம் என கூறி அதே வாட்ச் ஆன்லைன் ஷாப்பிங்கில் ரேட்டுடன் உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் போட்ட திமுகவினர், ஆடு மாடு மட்டுமே வைத்துள்ளதாக கூறிய அண்ணாமலைக்கு இத்தனை லட்சத்தில் வாட்ச் வாங்க பணம் ஏது என கேட்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

இதையடுத்து ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறுகையில் இது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரபேல் உதிரிபாகங்களால் தயாரிக்கப்பட்ட இந்திய நாட்டு வாட்ச். நான் தேசப்பற்றுள்ளவன், என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்சை கையில் கட்டியிருப்பேன். என்னால் ரபேல் விமானத்தில்தான் பறக்க முடியவில்லை. ரபேல் வாட்ச்சையாவது கட்டிக் கொள்ளலாம் என்றுதான் வாங்கினேன்.

 வாட்ச்

வாட்ச்

இது போன்ற வாட்ச் உலகிலேயே 500தான் இருக்கும். இந்த வாட்ச்சின் பின்புறம் சீரியல் நம்பர் போட்டிருக்கும் என நீண்ட நெடிய விளக்கம் அளித்த அண்ணாமலை, இதற்கான பில்லை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, பில் வைத்திருந்தால் வெளியிடுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார். ஆனால் கிட்டதட்ட 4 அல்லது 5 மாதங்கள் ஆன நிலையில் இன்னமும் பில்லை கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தன.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

அது போல் வரும் ஏப்ரல் மாதம் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்கிறார். அப்போது தனது சொத்து விவரங்களும், வாட்சின் பில்லையும் வெளியிடுவேன் என்றும் அது போல் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அவர் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது.

10 ஆயிரம்

10 ஆயிரம்

அதற்கு அவர் இது ரூ 10 ஆயிரம்தாங்க என்றார். அது போல் நடிகர் எஸ்வி சேகரும் தான் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நீங்கள் சொல்லும் நபர் பாஜக தலைவராக வந்த பிறகு எத்தனை உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள், இதற்கு முன்பு எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள் என சொல்ல சொல்லுங்கள்.

 பில் கேட்டேனே

பில் கேட்டேனே

இதையெல்லாம் சொல்லிவிட்டு அந்த நபரை பேச சொல்லுங்கள். நான் ஒரு பில் கேட்டேன், அதையாவது கொடுத்தாரா? அதை கொடுத்துவிட்டு பேச சொல்லுங்கள். எதையுமே கொடுக்காமல் அடுத்தடுத்த விஷயங்களுக்கு தாவி தாவி சென்றால் அவரை என்ன சொல்வீர்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த விமர்சனம் குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது குரங்கு மாதிரி தாவிக்கிட்டே இருந்தால் என்ன அர்த்தம் என கூறியதுடன் நாய், பேய், சாராயம் விக்கிறவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+