வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்!
சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது 'வீ தி லீடர்' இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேசிய கட்சிகளின் வழக்கமான அமைப்பு முறையை பின்பற்றாமல், தமிழக அரசியலில் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "கழக" பாணியிலான கட்சிக் கட்டமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவராக இருந்த காலத்திலேயே, தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறை தமிழக மக்களின் அரசியல் மனநிலையுடன் முழுமையாக ஒத்துப்போவதில்லை என்று அண்ணாமலை பல்வேறு மேடைகளில் கருத்து தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, கட்சி நிர்வாக கட்டமைப்பில் அடிமட்ட தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு குறைவாக இருப்பதாக அவர் கருதினார். இதன் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் அவரது புதிய அரசியல் இயக்கத்தில், வார்டு முதல் மாநில அளவு வரை வலுவான அமைப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.
வீ தி லீடர்
திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் காணப்படுவது போல, வார்டு, கிளை, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என பல அடுக்குகளில் நிர்வாகிகளை நியமித்து கட்சியை விரிவுபடுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 'வீ தி லீடர்' அமைப்பின் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை
இதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமைப்பு முறையை வடிவமைப்பதற்காக, கடந்த காலங்களில் திராவிட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அனுபவம் வாய்ந்த சில முன்னாள் நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல தசாப்தங்களாக அடிமட்ட அமைப்புகளை எவ்வாறு கட்டமைத்து வளர்ந்தன?, அந்த அமைப்புகள் தேர்தல் வெற்றிக்கு எவ்வாறு உதவின? என்பதைக் குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
புதிய கட்சி
அதே நேரத்தில், தனது புதிய கட்சியில், பழைய அரசியல் கட்சிகளின்ல் இருப்பது போல் குறைகள் இருக்கக்கூடாது என்பதிலும் அண்ணாமலை கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக ஒரே நபர் முக்கிய பதவிகளில் நீடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக மற்றும் காங்கிரஸ்
இதற்காக, ஒரு நிர்வாகி எத்தனை ஆண்டுகள் ஒரு பதவியில் தொடர முடியும், ஒரே நபர் எத்தனை முறை தேர்தலில் போட்டியிடலாம், பதவி உயர்வு மற்றும் பொறுப்பு மாற்றங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள மாநில பொதுச்செயலாளர், மாநில செயலாளர் போன்ற பதவிகளுக்கு பதிலாக, மண்டல அடிப்படையிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
உறுப்பினர் சேர்க்கை
இதன் மூலம் மாநிலம் முழுவதும் நிர்வாக செயல்பாடுகளை விரைவாக ஒருங்கிணைக்க முடியும் என அண்ணாமலை தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் தற்போது புதிய மாற்றங்கள் உருவாகி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் முயற்சி பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு அடுத்த சில வாரங்களில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications