பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை கொடுத்த அசைன்மெண்ட்! பரப்புரையில் பாய்ச்சல் காட்டத் திட்டம்!
சென்னை: பாஜக மாவட்டத் தலைவர்களுக்கும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அண்ணாமலை முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டும் அது குறித்து இன்னும் மக்கள் மத்தியில் கட்சியினர் சரியாக எடுத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் அண்ணாமலைக்கு இருந்திருக்கிறது.

இதையடுத்து சென்னையில் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜக மாவட்ட தலைவர்களை அழைத்த அண்ணாமலை சிலிண்டர் விலை குறைப்பில் மத்திய அரசின் பங்கு பற்றி விரிவாக பேசியிருக்கிறார். சமூக் வலைதளங்களிலும், கிராமப்புறங்களிலும் இதனை நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது குறித்தும் நிர்வாகிகள் ஆர்வமுடன் பரப்புரை செய்யாததை சுட்டிக்காட்டி அதிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரை 1200 ரூபாயாக அதிகரித்து அதில் 200 ரூபாய் குறைப்பதில் என்ன ஆச்சரியம் என திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு சமூக வலைதள நிர்வாகிகளுக்கு ஐடியாக்கள் வழங்கியுள்ளார் அண்ணாமலை. இதனால் இனி வரும் நாட்களில் சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் பலமாக இருக்கும் எனத் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications