“பாவம்.. அம்னீஷியா”.. யார் என்றே தெரியாது எனச் சொன்ன அண்ணாமலையை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்!
சென்னை: எஸ்.வி.சேகர் யாரென்றே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், "பாவம் அம்னீஷியா" என கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 25 எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்புவோம் என சூளுரைத்து வந்த அண்ணாமலையும் கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அண்ணாமலை மீது விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அண்ணாமலையை எஸ்.வி.சேகர் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தற்போது அதிகமாகவே சீண்டி வருகிறார்.
"அண்ணாமலை கஷ்டம் அவரால் வந்தது. கடப்பாரையை எடுத்து அவரே குத்திக்கொண்டார். அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார். அவர் தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதில் 13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தான்.
இதுகுறித்து 6 மாதங்கள் முன்பே நான் கூறினேன். தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம் தான் என்று. அது இப்போது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன், அதுவும் நடந்திருக்கிறது.
தமிழக பாஜக, எப்போது அண்ணாமலையின் யோசனையைக் கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துக்கொண்டதோ, அன்றே தமிழக பாஜகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு தன்னால் ஒரு சீட் கொடுக்கக் கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை, அசிங்கம். 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்குதான். எனவே தோல்வியை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதை சரி செய்தால் தான் திருந்த வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள், எஸ்.வி.சேகர், அண்ணாமலை குறித்து கூறியுள்ள கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அவர் யார் என்று எனக்குத் தெரியாது என அண்ணாமலை பதில் அளித்தார்.

இந்நிலையில், அண்ணாமலை உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.வி.சேகர், "எங்க வீட்டுக்கு வந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு எனக்கு போட்ட துண்டை திரும்ப போட்டு எடுத்த செல்பி. பாவம் அம்னீஷியா." எனக் கூறியுள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications