ரூ.4,000 கோடிக்கு நடந்த வேலை என்ன? நீதிபதி தலைமையில் ஆடிட் செய்யணும்! அண்ணாமலை புது டிமாண்ட்!
சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக ரூ.4,000 கோடிக்கு நடந்த வேலை குறித்து சிட்டிங் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வெள்ளம் குறித்து திமுக அரசிடம் கேட்க நிறைய கேள்விகள் இருப்பதாகவும் ஆனால் இந்தச் சூழலில் அரசியல் வேண்டாம் என்பதால் தவிர்த்து வருவதாகவும் இயல்பு நிலை திரும்பிய பிறகு கேட்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதனைக் கூறினார்.

மத்திய அரசு கொடுத்த பணமெல்லாம் எங்கே, யார் ஒப்பந்ததாரர், என்ன பணிகள் நடந்தது, எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் சிட்டிங் நீதிபதி தலைமையில் ஆடிட் செய்ய வேண்டும் என்றும் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா எனவும் சவால் விடுத்துள்ளார். திருப்புகழ் ஐ.ஏ.எஸ்.ஸை பற்றி குறை சொல்லவோ விமர்சிக்கவோ முடியாது என்றும் அவர் அப்பழுக்கற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் அவர் கொடுத்தப்படி திட்ட அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தியதா என்பது தான் கேள்வி எனவும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் திமுக அரசின் ரூ.4,000 கோடி செலவு குறித்து தாங்கள் கேள்விகளை முன் வைப்போம் எனக் கூறிய அண்ணாமலை, மாநிலத்தின் தலைநகரிலேயே இப்படி வெள்ளம் வருகிறது என்றால் தமிழ்நாட்டிற்கு எப்படி உலக முதலீட்டாளர்கள் வருவார்கள் அவர்கள் எப்படி இங்கு தொழிற்சாலைகள் அமைப்பார்கள் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் அண்ணாமலை.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார் அண்ணாமலை.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications