சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழிதோண்டும் பாஜக “தலைகள்”.. விரக்தியில் அண்ணாமலை! “செருப்பு” பதிவுக்கு காரணம் சொன்ன செந்தில்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தலைமைக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிகாரத்தை குறைத்துள்ளதால் ஏற்பட்ட விரக்தியில் பிடிஆர் குறித்து அவர் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டு உள்ளார் என திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்து இருக்கிறார்.

சில வாரங்கள் முன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செல்தினார்.

மீண்டும் “செருப்பு” பஞ்சாயத்து.. கோபத்தை கொப்பளித்த அண்ணாமலை - பிடிஆர் மீது தரம் தாழ்ந்த விமர்சனம்மீண்டும் “செருப்பு” பஞ்சாயத்து.. கோபத்தை கொப்பளித்த அண்ணாமலை - பிடிஆர் மீது தரம் தாழ்ந்த விமர்சனம்

அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

“ஆடு” பெயரை ஏன் சொல்றதில்ல? செருப்பு வீச தூண்டுபவர்.. பிடிஆர் அடுக்கிய “4 பாயிண்ட்” - யார சொல்றாரு? “ஆடு” பெயரை ஏன் சொல்றதில்ல? செருப்பு வீச தூண்டுபவர்.. பிடிஆர் அடுக்கிய “4 பாயிண்ட்” - யார சொல்றாரு?

“பவர் கட்” - தலைவர் அண்ணாமலைதான்! ஆனால்.. “கொம்பை” வெட்டிய பாஜக! மீண்டும் கமலாலயத்தில் எல்.முருகன் “பவர் கட்” - தலைவர் அண்ணாமலைதான்! ஆனால்.. “கொம்பை” வெட்டிய பாஜக! மீண்டும் கமலாலயத்தில் எல்.முருகன்

10 பேர் கைது

10 பேர் கைது

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அண்ணாமலை ஆடியோ

அண்ணாமலை ஆடியோ

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

நான்தான் பேசினேன்

நான்தான் பேசினேன்

இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என பாஜக அண்ணாமலை ஒப்புக்கொண்டார். "பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான். அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும்" என கூறினார்.

பிடிஆர் ட்வீட்

பிடிஆர் ட்வீட்

இந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் அண்ணாமலை பற்றி ஒருபதிவை வெளியிட்டு உள்ளார். அதில்,

"நான் ஏன் ஆடு (Emoji) பெயரை சொல்ல மாட்டேன்?
1. வீரமரணம் அடைந்தவரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது.
2. தேசியக் கொடி இருந்த காரின் மீது செருப்பு வீச வைப்பது.
3. அப்பட்டமாக பொய் சொல்வது.
4. அரசியல் காரணத்துக்காக மக்கள் உணர்வுகளை தூண்டுவது.

அடு போன்ற அற்பமானவர்களின் மனநிலை குறித்து உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு." என்று பதிவிட்டு உள்ளார்.

 அண்ணாமலை ட்வீட்

அண்ணாமலை ட்வீட்

இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை காட்டமாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், "பிடிஆர், உங்கள் பிரச்சனை இதுதான். முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமான உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்க முடியாது. பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்து இருக்கிறீர்களா?

செருப்புக்கு கூட ஈடில்லை

செருப்புக்கு கூட ஈடில்லை

அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன். என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் அளவுக்கு தரக்குறைவாக நான் இறங்க மாட்டேன். எனவே கவலைப்பட வேண்டாம்." என்றார்.

செந்தில்குமார் ட்வீட்

செந்தில்குமார் ட்வீட்

அண்ணாமலையின் இப்பதிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. செந்தில்குமார், "விரக்தியால் இப்படி கூறியுள்ளார். அண்ணாமலையில் செயல்பாட்டு கட்சித் தலைமைக்கு திருப்தியை தரவில்லை. எனவே அவரை கண்காணிக்க மத்திய இணை அமைச்சரை நியமித்து அதிகாரங்களை குறைத்துள்ளனர். எனவே தன் மீது தலைமை கொண்டுள்ள அதிருப்தியை குறைக்கும் வேலையை செய்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் பெரிய குழியை அண்ணாமலைக்கு தோண்டி வருகின்றனர்." என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Annamalai is in frustration because on BJP leadership - Senthilkumar mp: பாஜக தலைமைக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிகாரத்தை குறைத்துள்ளதால் ஏற்பட்ட விரக்தியில் பிடிஆர் குறித்து அவர் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டு உள்ளார் என திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்து இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X