அம்மாவையும் மனைவியையும் இழுத்து விட்டாரே! சட்டென அண்ணாமலை சப்போர்டுக்கு வந்த காயத்ரி!கவனிச்சீங்களா?

ஜெயலலிதா தனது மனைவியை விட பவர் குறைந்தவர் என்று கூறிவிட்டதாக அண்ணாமலை மீது அதிமுகவினர் சிலர் கொதித்து போய் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் மனைவியை தனிப்பட்ட வகையில் தாக்க கூடாது என்று சொன்ன காயத்ரி ரகுராம், இன்னொரு பக்கம் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார். இவரை அடுத்து பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவை இந்த தொடர் நிகழ்வுகள் அப்செட் ஆக்கி உள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன்தான். தேசிய கட்சி என்றாலே பெரிய கட்சி இல்லை, தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தது. நாம் திராவிட கட்சிகளை சார்ந்து இருந்த நிலை இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. அண்ணாமலை இங்கே தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் எல்லோரையும் தாஜா பண்ணிக்கொண்டு இருக்க மாட்டேன். நான் தலைவன்., என்று குறிப்பிட்டார். இவர் தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டதை அதிமுகவின் ஜெயக்குமார் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

விளக்கம்

விளக்கம்

இதையடுத்து தனது கருத்திற்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, நான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன் என உவமையில் அவ்வாறு கூறினேன். அதாவது ஜெயலலிதா போல தலைவராக செயல்படுவேன். என்னை பொருத்தவரை என் தாய், ஜெயலலிதா அம்மையாரைவிட 100 மடங்கு பவர்புல், என் மனைவியோ ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்புல். நான் நேற்றுமுன் தினம் மதுரை, கோவை விமான நிலையங்களில் என்ன பேசி உள்ளேனோ அதுதான் என் கருத்து., என்று விளக்கம் அளித்தார்.

கருத்து சர்ச்சை

கருத்து சர்ச்சை

அவரின் இந்த கருத்தும் சர்ச்சை ஆகி உள்ளது. ஜெயலலிதா தனது மனைவியை விட பவர் குறைந்தவர் என்று கூறிவிட்டதாக அதிமுகவினர் சிலர் கொதித்து போய் உள்ளனர். இந்த நிலையில்தான் இணையத்தில் அதிமுகவினர் சிலர் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து , அது அண்ணாமலையின் மனைவியின் புகைப்படம் என்று கூறி வருகின்றனர். அதோடு சில தவறான கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர். திமுகவின் சிலரும் இதை சேர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில்தான் இப்படி போட்டோ போடுவது தவறு என்று காயத்ரி கூறி உள்ளார்.

அண்ணாமலை மனைவி

அண்ணாமலை மனைவி

அண்ணாமலை மனைவியை தனிப்பட்ட வகையில் தாக்க கூடாது என்று சொன்ன காயத்ரி ரகுராம், இன்னொரு பக்கம் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில், தனிப்பட்ட தாக்குதல் தவறு.. ஆனால் அண்ணாமலை தனது அம்மாவையும் மனைவியையும் இப்போது தேவையில்லாமல் இங்கு இழுத்து விட்டார். இந்த மாதிரி அடுத்த வீட்டு பெண்களை பேசுறது எவ்ளோ அசிங்கமோ அதே மாதிரி தானே அண்ணாமலை என்னை போன்ற பெண்களை பொது வெளியில் கேவலமாக பேசியது... 3 மாதங்களாக அண்ணாமலையும் அவரது வார்ரூமும் எனது படங்களைப் பயன்படுத்தி என்னைத் தொடர்ந்து தாக்கினர். "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" அடையார் வார் ரூம் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை.. பொது வாழ்வில் இருக்கும் பெண்களான நாங்கள் இதை அன்றாடம் எதிர்கொள்கிறோம். எல்லோரும் நல்ல பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அண்ணாமலைக்கு மட்டும் அல்ல. அண்ணாமலையின் மனைவி படத்தை யாரும் பகிர வேண்டாம் யாரும் பற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அது அரசியல் ரீதியாக சரியல்ல. நன்றி, என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+