அடிச்சது அண்ணாமலைக்கு ஜாக்பாட்.. அவருக்கு இந்த பதவியா? உற்சாகமான ஆதரவாளர்கள்.. என்ன பதவி தெரியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்ட நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கிய நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அது எந்த பதவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் போட்டியில் இருந்து ஆச்சரியம் அளிக்கும் விதமாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
எல். முருகன் பல ஆண்டுகள் சட்டமன்றம் செல்லாத பாஜகவை அதிமுக கூட்டணி மூலம் அனுப்பி வைத்தார். ஆனால் அண்ணாமலை சந்தித்த தேர்தல்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. மேலும் அதிமுகவுடன் அவர் மேற்கொண்ட மோதல் போக்கு காரணமாக அதிமுக கூட்டணி உடைந்தது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து கூட்டணி அமைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிமுகவும் மண்ணைக் கவ்வியது. இரு கட்சிகளும் சேர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 10 முதல் 15 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக அதிமுக கூட்டணி அவசியம் என சில சீனியர்கள் ஆசைப்பட்டனர். அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்களை தூக்கி அடிக்க பாஜக முடிவு செய்தது என்னவோ உண்மைதான்.
அந்த வகையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்க வேண்டும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை நியமிக்க வேண்டும், அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என திட்டவட்டமாக எடப்பாடி பழனிச்சாமி கூற, அதனை ஒப்புக்கொண்டது பாஜக தலைமை. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தேர்தல் நடைபெற்ற நிலையில் எந்தவித போட்டியின்றி நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
அதிமுகவின் திட்டப்படியே நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழக பாஜக ஓரளவு காலூன்ற முடிந்தது, கிராமங்களிலும் கிளைகள் ஆரம்பிக்க முடிந்தது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுதினர். இது ஒருபுறம் இருக்க நிச்சயம் அண்ணாமலையின் திறமையை பயன்படுத்திக் கொள்வோம் என அமித்ஷா கூறி இருந்ததால் தேசிய அளவிலான பதவி அவருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு உற்சாகம் தரும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலைக்கு தேசிய பதவியோ அல்லது மத்திய அமைச்சர் பதவியோ வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், பாஜகவின் மிக முக்கிய பிரிவான இளைஞர் பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அமர்த்தப்படலாம் என தகவல் பரவி இருக்கிறது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்கின்றனர் டெல்லி சீனியர்கள்.
அண்ணாமலையிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதே நேரத்தில் அண்ணாமலையின் திறமையும் பாஜகவுக்கு தேவை என்பதால் அவரை தேசிய தலைவராக்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது என்கின்றனர் அக்கட்சி வட்டாரத்தினர் .விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம்












Click it and Unblock the Notifications