டெல்லியில் அண்ணாமலை.. அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் சந்திப்பு.. பேசப்பட்டது என்ன?
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றே டெல்லி சென்றார்.

பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும், கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும் அக்கட்சி அழைப்பு விடுத்து இருந்தது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தலைமையிலான கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது அதிமுகவை பாஜக கூட்டணியில் அழைப்பதற்கு தான் இப்படி அவர் பேசியிருக்கிறார் என்ற கருத்து பரவியது.
இது தொடர்பாக டெல்லி சென்ற அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், " அதிமுக என குறிப்பிட்டு அமித்ஷா அழைப்பு விடுக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியை தொடங்கியதே பாஜகதான். எனவே அந்த கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட இணையலாம் என்று கூறினார்.
இந்தநிலையில், இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், வரும் 11 ஆம் தேதி ஜேபி நட்டா தமிழகம் வருவது குறித்தும் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications