டெல்லி பிளான் கேன்சல்.. சென்னைக்கு செல்லும் அண்ணாமலை.. பாதயாத்திரைக்கு 2 நாட்கள் ரெஸ்ட்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜேபி நட்டா அழைப்பின் பேரில் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவர் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு வரை இந்த பாதயாத்திரை தொடரும் நிலையில், இடையிடையே மற்ற பணிகளிலும், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்பார் அண்ணாமலை.
இத்தகைய சூழலில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. மதுரையில் பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், அதை முடித்துக்கொண்டு டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.
பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், "நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்" என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சை அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலையை விமர்சனம் செய்தார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவர் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தனர். இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு சென்னை செல்கிறார் அண்ணாமலை. அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications