பிராமணர்களை ஒடுக்குவதே அண்ணாமலைதான்.. பிராமணியத்தையே திமுக எதிர்க்கிறது: பத்திரிகையாளர் இரா.குமார்
சென்னை: பிராமணர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் செயல்படுகிறார்; திமுக பிராமணியம் எனும் சித்தாந்தத்தையே எதிர்க்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் இரா. குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்தால் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்; நாஜிக்கள் யூதர்களை ஒடுக்கியதைப் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் நசுக்கப்படுகிறார்கள் என அண்மையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் இரா.குமார் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாட்டு ஆதீனங்கள் பொதுவாக பிராமணர் அல்லாதவர்களைக் கொண்டது. வேளாளர்கள், முதலியாளர்கள் அல்லது செட்டியார்களைக் கொண்டதுதான் ஆதீனங்கள். இந்த வரலாறு தெரியாமல் ஒருவர் பிராமணர்கள் என பேசிவிட்டார். இதற்கு, ஆதீனங்கள் யாரும் பிராமணர்களே இல்லை என்றுதான் அண்ணாமலை பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் பிராமணர்களை ஒடுக்குகிறார்கள் என்றெல்லாம் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
பிராமணர்களை ஒடுக்கும் அண்ணாமலை: தமிழ்நாட்டில் இப்போது பிராமணர்களை ஒடுக்குவதே அண்ணாமலைதான். பாஜகவில் கே.டி. ராகவன் ஒரு சீனியர். டிவி விவாதங்களில் நேர்த்தியாக கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அவரை ஹனிடிராப் செய்து சிக்க வைத்து வீடியோவை வெளியிட சொன்னது அண்ணாமலை என மதன் ரவிச்சந்திரன் வெளிப்படையாக குற்றம்சாட்டி ஆடியோவையும் வெளியிட்டார். பிராமணர்களான எஸ்வி சேகர், காயத்ரி ரகுராம் போன்றோரும் ஓரம்கட்டப்பட்டனர். பிராமணர் அல்லாத சீனியர்களை ஆளுநர்களாக்க பரிந்துரைத்து ஓரம் கட்டுவது- பிராமணர்களை பாஜகவில் இருந்து ஓரம்கட்டுவது என்பது அண்ணாமலை செய்யும் வேலை.
பிராமணிய எதிர்ப்பு: திமுக, பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறது. பிராமணர்களை எதிர்க்கவில்லை. பெரியார் கடவுள் மறுப்பை பேசியவராக இருந்தாலும் மக்கள் அவரை சமூக சீர்திருத்தவாதியாக, தங்களது வாழ்க்கையை உயர்த்தியவராகவே பார்க்கின்றனர். அதனால்தான் பெரியாருக்கு எதிராக பாஜக தலைவர்கள் எச்.ராஜா போன்றவர்கள் பேசிய போதும் மக்கள் ஏற்கவில்லை. பெரியாருக்கு எதிராக பேசினால் சாமி கும்பிடுகிற 60-70% பேர் தங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என நினைக்கிறது பாஜக. ஆனால் பிராமணர்கள் ஓட்டும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை; பிராமணர் அல்லாதவர் வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.
ஒடுக்குமுறை எங்கே? : ஜாதி, மதவேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் திமுக, கருணாநிதியால் பயன்பெற்றவையாகத்தான் இருக்கும். முதல் தலைமுறை பட்டதாரிகள் படிக்க நிதி உதவி என திமுக அரசு அறிவித்தது? அதில்
ஜாதி பார்க்கப்பட்டதா? பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்- பிராமணர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டதா? புதுமைப் பெண் திட்டம்- மேல்படிப்புக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ1,000 திட்டம்- பிராமணர்களுக்கு இல்லை என சொல்லப்பட்டதா?

இல்லம் தேடி கல்வி- பிராமணர்களுக்கு இல்லை என சொல்லிவிட்டு இதர சமூகத்துக்குதான் கொடுத்தார்களா? இல்லம் தேடி மருத்துவம்- பிராமணர் வீடுகளுக்கும்தானே போகிறார்கள்.. அவர்களுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டதா? எதில் பிராமணர்களை ஒதுக்கி வைத்துள்ளார்கள்? தமிழ்நாட்டில் கோவில் கும்பாபிஷேகங்களே நடைபெறாமல் இருக்கின்றனவா? தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோவில் நிலத்தை மீட்டது திமுக அரசுதானே? கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததில் பாதிப்பேர் பாஜகவினர் அல்லவா? ஆக எதில் பிராமணர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்?
அண்ணாமலை பொய்: அப்படி எதுவும் இல்லாத சூழ்நிலையில் அண்ணாமலை பொய்யை அள்ளிவிடுகிறார்.. இதற்கு காரணம் கேட்டால் அப்புறமாக சொல்கிறேன் என சொல்லிவிட்டுப் போய்விடுவார். அண்ணாமலை தாம் பேசியதற்கு இதுவரைக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் காட்டி இருக்கிறாரா? சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெறவே இல்லை என்றனர். ஆளுநரும் சொன்னார். ஆனால் இப்போது உண்மை அம்பலமாகிவிட்டது அல்லவா. சிதம்பரத்தில் குழந்தை திருமணம் ஏன் நடக்கிறது எனில் திருமணமான தீட்சிதர்கள்தான் கோவிலில் போய் தட்டேந்த முடியும். திருமணமாகாதவர்களுக்கு அந்த உரிமை இல்லை. தமிழ்நாட்டில் எந்த ஒரு பிராமணராவது தாம் ஒடுக்கப்பட்டு, நசுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம் என சொல்வார்களா? அப்படி ஒடுக்குமுறை இருந்தால்தான்தானே அண்ணாமலை சொல்வது போல உடைக்கவே முடியும்? அப்படியான ஒரு பிம்பத்தை கட்டமைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார்; விரும்புகிறார். அப்படியான ஒரு பிம்பத்தை அவரால் கட்டமைக்கவே முடியாது. இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் இரா.குமார் கூறியுள்ளார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications