திருவிழா தொடங்கியாச்சு.. தமிழ் மொழியை தாய் போல நேசிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்: அண்ணாமலை
சென்னை: நம் தமிழ் மொழியைத் தன் தாயைப்போல நேசிக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்து பெருவாரியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணையை இன்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். இந்தியாவில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்னும் 4 நாட்களில் தொடங்குகிறது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரதநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.
நம் தேசத்தின் அடுத்த பாரதப்பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தேர்தலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் பணிவாக வேண்டுகிறேன். 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் தேர்தல், சுமார் 1.82 கோடி புதிய வாக்களர்கள் பங்கு பெறப்போகும் தேர்தல், நாட்டின் 47.10 கோடி பெண்களும், 49.70 கோடி ஆண்களும் வாக்களிக்கும், சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கும் மிகப் பிரம்மாண்டமான தேர்தல்.
சுமார் 55 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல். 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல்திறன் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளும், 85 வயதுக்கும் அதிகமான மூத்த குடி மக்களும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் தேர்தல், மிகவும் பாதுகாப்பான நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.
நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைக்கும் பிரதமர், குடும்ப ஆட்சியை தவிர்த்து, நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைக்கும் பிரதமர், உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டின் பெருமைகளை உயர்த்திய பிரதமர், எழை எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எளிதாகக் கிடைக்கச் செய்த பிரதமர், கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நாட்டின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றிய பிரதமர், புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபின் பெருமை போற்றும் செங்கோலை நிறுவி, நம் தமிழ் மொழியைத் தன் தாயைப்போல நேசிக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து பெருவாரியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டுகிறேன்.
தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில், வரும் 20.03.24 அன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம். ஆகவே தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications