உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாஜக விடுத்த அழைப்பை தொடர்ந்து அண்ணாமலை அவசரஅவசரமாக ஹெலிகாப்டரில் சென்னை விரைந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை. பாஜக வெல்ல கடினமாக இருக்கும் தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Annamalai

குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளை குறிவைத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஒதுக்கவில்லை. இதேபோல் பாஜக பலமாக இருப்பதாக நினைக்கும் சென்னை, கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜக தொண்டர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

பாஜகவினர் அதிருப்தி

இதுபற்றி பாஜக மேலிட தலைவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் பாஜக தொண்டர்கள் தங்களின் அதிருப்தியை வலைதளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொகுதிகளை மாற்றி கேட்கும் பாஜக

இது பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுக சார்பில் 167 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அண்ணாமலை உள்பட சில முக்கிய தலைவர்களை களமிறக்கும் வகையில் 5 தொகுதிகளை மாற்றி தரும்படி பாஜக சார்பில் அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை புறப்பட்ட அண்ணாமலை

இந்நிலையில் தான் சென்னை கமலாலயத்தில் பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர அவசரமாக அண்ணாமலை சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
அண்ணாமலை தற்போது புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி அங்கு பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் பாஜக மேலிட உத்தரவை தொடர்ந்து அண்ணாமலை புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டரில் அவர் சென்னைக்கு விரைந்துள்ளார்.

கூட்டம் நடத்துவதன் பின்னணி

இந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மையக்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அது பாஜக தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும். தற்போது அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தாலும் கூட அவரை களமிறக்க பாஜக தலைவர்கள் விரும்புவதாக கூறப்பபடுகிறது. இதனால் இந்த கூட்டத்தில் அண்ணாமலையிடம் அதுபற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இதனால் இன்று சென்னையில் நடக்கும் பாஜக மையக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+