தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்! ஆசையை பகிர்ந்த அண்ணாமலை! காங்கிரசுக்கு டஃப் தந்த பாஜக!
சென்னை: தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே பாஜகவின் ஆசை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்கள் அதிகாரத் திமிரில் இருப்பதாகவும் அதன் சாட்சிகள் தான் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தாமோ அன்பரசனும் என விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

காமராஜர் பிறந்தநாள்
காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதன் பிறகு பேசிய அவர், தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை கொண்டு வருவோம் எனக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு டஃப் கொடுத்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது லஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் கை சுத்தத்தோடு நேர்மையான முறையில் ஆட்சி நிர்வாகம் நடந்ததாக தன்னையே அறியாமல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாராட்டினார் அண்ணாமலை.

திமுக மீது சாடல்
பிறகு சுதாரித்துக்கொண்ட அவர் அப்படியே திமுக பக்கம் தனது அட்டாக்கை தொடங்கினார். திமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கு என்னவென்றால் பொதுமக்களை செல்லமாக அடிப்பது என சாடினார். திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அதிகாரத் திமிரில் இருப்பதாக கூறிய அவர், அதற்கு உதாரணமாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தாமோ அன்பரசன் ஆகியோரது பெயர்களையும் குறிப்பிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தலையிட மாட்டோம்
மேலும் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எந்தக் காலத்திலும் பாஜக தலையிடா என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறினார். இன்னொரு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை எனக் கூறிய அவர், அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனைக்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் தான் தீர்வு காண வேண்டுமே தவிர நாங்கள் அல்ல எனக் கூறினார்.

காங்கிரஸ் மவுனம்
இதனிடையே தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை கொடுக்க விரும்புவதாக காங்கிரஸ் கட்சியினர் இன்னும் வெளிப்படையாக வாய் திறக்காத நிலையில், அண்ணாமலை அது குறித்து பேசியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications