திமுக கழுத்தை பிடித்து தள்ளினாலும் காங்கிரஸ் போக மறுக்குது! அட்டாக்கை ஆரம்பித்த அண்ணாமலை!
சென்னை: கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கொடுக்கும் ஆக்சிஜனில் தான் காங்கிரஸ் உயிர் வாழ்ந்து வருவதாகவும் இல்லையென்றால் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் எனவும் கூறியிருக்கிறார்.
பாஜகவை பொறுத்தவரை எந்தவொரு தனி மனிதரையும் நம்பியில்லை என அண்ணாமலை கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் மீது அட்டாக்
தமிழகத்தில் பொதுவாக திமுகவை மட்டுமே மையப்பொருளாக வைத்து பேசியும் அரசியல் செய்தும் வந்த அண்ணாமலை இன்று காங்கிரஸ் கட்சியை சீண்டியிருக்கிறார். இதற்கு காரணம் நேற்றைய தினம் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை தான், அதில் அண்ணாமலை உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் பாஜக மீதான வெறுப்பு குறையாது என கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியது தான் காங்கிரஸ் மீதான அண்ணாமலையின் அட்டாக்கிற்கு காரணமாகும்.

குடும்ப ஆதிக்கம்
சென்னையில் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மஹாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று தான் கூறியதாகவும் நாங்கள் உருவாக்குவோம் எனக் கூறவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார். எந்தெந்த மாநிலங்களில் குடும்பக் கட்சிகளின் ஆதிக்கம் உள்ளதோ அந்தந்த மாநிலங்களில் இது தான் நிலை எனக் கூறினார்.

திமுக தரும் ஆக்சிஜன்
அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜகவில் புது முகங்கள் பலர் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு வருவார்கள் என்றும் எந்தவொரு தனி மனிதனையும் நம்பி கட்சி கிடையாது எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருவதாக கிண்டல் அடித்தார். திமுக கொடுக்கும் ஆக்சிஜனில் தான் காங்கிரஸ் உயிர் வாழ்ந்து வருவதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
Recommended Video

24 எம்.பி.க்கள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் 24 இடங்களில் வெல்லப்போவது உறுதி என்றும் இதை காங்கிரஸ் பார்க்கத்தான் போகிறது எனவும் அண்ணாமலை சவால் விடுத்தார். தமிழகத்தில் அணி அணியாக காங்கிரஸ் பிரிந்துள்ளதாகவும் அதனை ஒட்ட பாஜக பெவிகுயிக் வாங்கித் தர தயார் என்றும் அண்ணாமலை கே.எஸ்.அழகிரியை நோக்கி கிண்டல் செய்துள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications