உங்கள் கட்சியில் ஆயிரம் ஓட்டைகள்.. இதில் எங்களை கிண்டல் செய்கிறீர்கள்.. ப.சி.க்கு அண்ணாமலை நன்றி
சென்னை: ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் காங்கிரஸ், அதில் தத்தளித்து இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூரில் நேற்றைய தினம் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா கலந்து கொண்டார். மேலும் மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கலந்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களும் திறக்கப்பட்டதாக தெரிகிறது. இதை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

சிதம்பரம் விமர்சனம்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்! என தெரிவித்துள்ளார்.

கட்சி வளராது
அதாவது பாராட்டுவது போல் பாராட்டி கட்சி வளரவே இல்லை என்பதை ப சிதம்பரம் சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு பாஜக தலைவர் கே அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் உங்கள் காங்கிரஸ் கட்சி.

வாழ்வு
அதிலே தத்தளித்து, இலக்குத் தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் பாஜக தலைவர் கே அண்ணாமலையும் அதிமுகவை விட்டுவிட்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார்கள்.

திமுக மீது விமர்சனம்
இந்த கூட்டத்தில் பாஜக அண்ணாமலை கூறுகையில் பாஜகவில் மட்டும் தான் சாமானியன் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அலங்காரம் கொடுப்போம். இதற்காக கோபாலபுரத்தில் நீங்கள் பிறந்திருக்க வேண்டும், ஒரே குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி திமுகவில் வாரிசு அரசியலை விமர்சனம் செய்தார். காங்கிரஸும் பாஜகவும் சமூகவலைதளங்களில் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்கிறார்கள்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications