சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரௌபதி முர்மு.. பேரை கேட்டதுமே முதல்வர் ஸ்டாலினுக்கு "காய்ச்சல்".. பாஜக அண்ணாமலை விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 எம்பிக்கள் பாஜக சார்பில் வெற்றி பெறுவர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 3 மக்களவை தொகுதிகளுக்கும் 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக இரு மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டசபை தொகுதிகளிலும் வென்றது.

 'அண்ணாமலை’ படத்தின் அசாம் ரீமேக்.. பாதம் அளவு தண்ணீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர் 'அண்ணாமலை’ படத்தின் அசாம் ரீமேக்.. பாதம் அளவு தண்ணீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர்

பாஜக தலைவர்

பாஜக தலைவர்

இந்த வெற்றி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். 5 ஆண்டு காலம் நம்முடைய உழைப்பின் ஊதியமாக தேர்தலில் வெற்றியை கொண்டு வந்திருக்கிறோம். எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இன்று இந்தியாவில் சில இடங்களில் இடைத்தேர்தல் நடந்திருக்கிறது.

கோவா

கோவா

மூன்றாவது முறையாக கோவாவில் ஆட்சியில் அமர்ந்துள்ளோம். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவித்துள்ள திரௌபதி முர்மு அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். எப்போது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வேட்பாளரை திரௌபதி முர்மு என அறிவித்தோமோ அப்போதிலிருந்து தமிழக முதல்வருக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

அடித்தட்டு மக்கள்

அடித்தட்டு மக்கள்

மோடியை போல் அடித்தட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக யோசிக்கும் குட்டி மோடியாக வாழ வேண்டும் என்றால் தனி மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே அது முடியும். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி மக்கள் கட்சியா குடும்ப கட்சியா என்றே தெரியவில்லை. எது அரசு எது குடும்பம் என்றே தெரியவில்லை.

4 எம்எல்ஏக்கள்

4 எம்எல்ஏக்கள்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலிருந்து வெற்றி பெறுவர். நமது ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் நடக்கும் என அண்ணாமலை தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் 4 எம்எல்ஏக்களை பாஜக பெற்றது.

Recommended Video

    காங்கிரசுக்கு அன்று அண்ணா! திமுகவுக்கு இன்று அண்ணாமலை! ஆட்சி மாற்றம் உறுதி! நயினார் பேச்சு!
    சாத்தியமா

    சாத்தியமா

    அப்படியிருக்கும் போது தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 25 தொகுதிகளை வெல்வோம். அதாவது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என அண்ணாமலை கூறியிருப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    TN BJP President Annamalai says that 25 MPs from BJP will be win in Tamilnadu in 2024 loksabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X