இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. நான் அண்டங்காக்கா கருப்புங்க.. அண்ணாமலை பதிலடி
சென்னை: யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பாக அண்டங்காக்கா கலரில் உள்ள நான்தான் கருப்பு தமிழன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Recommended Video
மோடியும் அம்பேத்கரும் என்ற ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா இருவரையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை பார்த்தாலே அம்பேத்கரே பெருமைப்படுவார் என தெரிவித்திருந்தார். இதிலிருந்து தொடங்கியது சர்ச்சை!
இளையராஜாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அது போல் திமுக கூட்டணி கட்சியினர் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

4 தினங்கள்
கடந்த 4 தினங்களாக இந்த சர்ச்சை வெடித்து வந்த நிலையிலும் மோடி குறித்து கூறிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கருப்பு நிறத்தில் வேட்டி மற்றும் கருப்பு நிற டி சர்ட் அணிந்தபடி கடற்கரை ஓரத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் கருப்பு திராவிடன் , பெருமைமிகு தமிழன் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோடிக்கு ஆதரவாக இளையராஜா கருத்து தெரிவித்திருந்த நிலையில் தனது கருத்து என்ன என்பதை யுவன் மறைமுகமாக கூறிவிட்டதாகவே அவரது இந்த பதிவு பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நானும் கருப்பு திராவிடன்தான். சத்தியமாக எனக்கு இந்தி தெரியாது. அவர் கருப்புதான். ஆனால் அவரை விட நான் அண்டங்காக்கை கருப்பு.

நான் அண்டங்காக்கா நிறம்
அவர் கடற்கரையில் நின்ற படி ஏதோ புகைப்படம் எடுத்துபோட்டுள்ளார். இத்தோடு அந்த விஷயத்தை விடுங்கள். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து பாஜக தலைமைக்கு கடிதம் எழுதவும் தமிழக பாஜக தயாராக உள்ளது என்றார் அண்ணாமலை.
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications