கவுதமி இன்று கூட என்னை போனில் தொடர்பு கொண்டாரே.. நில அபகரிப்பு புகார் என்னாச்சு? அண்ணாமலை கேள்வி
சென்னை: நடிகை கவுதமியின் சொத்து அபகரிப்பு புகாருக்கு அவர் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: நடிகை கவுதமி தொலைபேசி வாயிலாக அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வார். இன்றும் அவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். கவுதமியின் சொத்து அபகரிப்பு புகாருக்கு காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை

கவுதமி கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார். கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். பிரதமர் மோடி இந்தியாவுக்கு செய்த வளர்ச்சி பணிகளை மேடைக்கு மேடை பேசி வருவார்.
அவருக்கு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் 8.16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை பாஜகவை சேர்ந்த அழகப்பன் என்பவர் அறிவுறுத்தலின் பேரில் தொழிலதிபர்கள் ரகுநாதன் , பலராமன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணத்தை எழுதிக் கொடுத்தார். அதன்படி அந்த சொத்தை அவர்கள் இருவரும் நல்லவிலைக்கு விற்று அந்த தொகையை கவுதமியிடம் கொடுத்துவிட வேண்டும்.
ஆனால் அவர்களோ ரூ 25 கோடி மதிப்பிலான சொத்தை வெறும் ரூ 11 கோடிக்கு விற்றுள்ளனர். அந்த 11 கோடி ரூபாயை கவுதமியிடம் முழுவதுமாக கொடுக்காமல் நிலத்தில் பிரச்சினை இருப்பதால் ரூ 4.10 கோடிக்கு மட்டும்தான் விலை போகும். இப்போதே விற்றுவிடுவது நல்லது. காலம் போக போக பிரச்சினையால் மதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால் கவுதமியிடம் ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவர்கள் இருவரும் ரூ 4.10 கோடியை இரு தவணைகளாக கொடுத்தனர். இந்த நிலையில் கவுதமிக்கு வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் ரூ 2 கோடி வரி செலுத்தவில்லை என வந்ததும் கவுதமி அலர்ட் ஆனார்.
உடனே சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போய் தனது சொத்து குறித்து விவரங்களை கேட்ட போதுதான் ரூ 11 கோடிக்கு அந்த சொத்து விற்பனையானது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுதமி கடந்த செப்டம்பர் மாதம் அழகப்பன் உள்ளிட்டோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications