விஜய் கடந்து போகணும்.. அரசியலுக்கு வந்தால் பர்ஷனலை தோண்டத்தான் செய்வார்கள்.. அண்ணாமலை அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''விஜயின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மனைவிக்கும், கணவனுக்கும் இடையேயான தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை அடிப்படையாக வைத்து அநாகரிகமா அரசியலாக்க நான் விரும்பவில்லை. ஒருவர் அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட விஷயங்களை தோண்டி எடுப்பார்கள். அரசியலுக்கு வரும்போதே விஜய் இதை உணர்ந்து தான் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதை கடந்து போகணும்'' என்று விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இதுதொடர்பான மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

annamalai-says-that-vijay-should-be-overcome-all-these-things-because-if-come-to-politics-dig-into-p

இந்த மனுவில், ''விஜய்க்கு நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது. அதனை விஜய் கைவிடவில்லை'' என்று குற்றம்சாட்டி சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில்தான் விஜயிடம், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்பது பற்றி தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை கூறியதாவது: விஜயிடம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று (அதாவது நேற்று) அது வெளிய வந்திருக்கு. நான் எப்பவும் சொல்றது தான். இது விஜய், அவரோட மனைவி, கோர்ட் - இந்த மூணு பேருக்கு இடையில உள்ள பிரச்சனையா தான் நான் பார்க்கிறேன். இது ஒரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.

விஜயின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மனைவிக்கும், கணவனுக்கும் இடையேயான தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை அடிப்படையாக வைத்து அநாகரிகமா அரசியலாக்க நான் விரும்பவில்லை. அவர்களுக்கு எங்கிருந்தாலும் சந்தோஷம் கிடைக்கட்டும். எங்கிருந்தாலும் அமைதி கிடைக்கட்டும்.

அரசியலுக்கு வந்துட்டோம்னா தீப்பந்தத்துக்குள்ள ஒரு மனிதன் போயிட்டு வருகிறது மாதிரி தான். அழுத்தம் இருக்கும். ஒருவர் அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட விஷயங்களை தோண்டி எடுப்பார்கள். அது எல்லோருக்கும் நடப்பது தான். விஜய்க்கும் அது இருக்கு. அரசியலுக்கு வரும்போதே விஜய் இதை உணர்ந்து தான் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதை கடந்து போகணும். தாண்டி தான் போக வேண்டும்.

இதை தாண்டி தான் அவர் அரசியல் இருக்கு. இதை பார்த்து தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா? என்பது இருக்கு. விஜயை பொறுத்தவரை சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம். நிம்மதியா வீட்டிலேயே இருந்திருக்கலாம். கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்யலாம். சிரஞ்சீவிக்கு ஏற்பட்டது தான்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு பிரஷரில் இருந்து வெளியே வர வேண்டும். இது எம்ஜிஆருக்கும் இருந்தது. இதை பாசிட்டிவ், நெகட்டிவ் என்று சொல்ல வரவில்லை. இதை விஜய் கடந்து தான் போகணும். இதற்கான விலையை கொடுக்கணும். இதற்கான நியாயம், தர்மத்தை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனையாக தான் பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனம் வைத்து அநாகரிகமாகவோ, அநாவசியமாகவோ அரசியல்படுத்த விரும்பவில்லை. என்னுடைய அரசியல் அப்படியானது இல்லை'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+