வேட்டைக்குக் கிளம்பிய நயினார்.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஆப்பு! வார் ரூமை களையெடுக்க அதிரடி வியூகம்!
சென்னை: பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் பாஜக மூத்த தலைவர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஜானி பாய் என்ற பெயரில் ட்விட்டரில் இறங்கி வந்த ஜானி ராஜா என்பவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை ஆதரவு 'வார் ரூம்' பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதனால் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்தபோது அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்பது பலருக்கும் தெரியாது. இதனையடுத்து கட்சியில் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அடுத்தடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று ஒவ்வொரு தொலைக்காட்சி விவாதங்களிலும் தேடித் தேடிச் சென்று பங்கேற்று கட்சியை வளர்த்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை பாஜகவினர் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.

பாஜக தமிழ்நாடு
அதற்குப் பிறகு எல் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே ஐபிஎஸ் பதவியை செய்து விட்டு தமிழக பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே திமுக தலைமையை கடுமையாக சீண்டிய அண்ணாமலை இளைஞர்களிடையே பெரும் மதிப்பை பெற்றார். இதனால் பாஜகவின் செல்வாக்கும் உயர்ந்தது. இளைஞர்களிடையே அண்ணாமலையின் செல்வாக்கு அதிகரித்த நிலையில் மோடி அமித்ஷா நேரடியாக அண்ணாமலையை பாராட்டும் அளவுக்கு அவரது மதிப்பு உயர்ந்தது.
அண்ணாமலை
இதற்கிடையே அரசியலில் அதிரடி பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களையும் தாக்கத் தொடங்கினார். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி என அவரது விமர்சனம் கூட்டணி குழப்பத்தை உருவாக்கியது. அண்ணாமலையை நீக்க வேண்டும் என அதிமுகவினர் குரல் கொடுத்த நிலையில் அண்ணாமலை கொடுத்த சில சர்வேக்களை பார்த்து மக்களவை தேர்தலில் அவரை தலைமை தாங்க பாஜக அழைத்தது. இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அண்ணாமலை அமைத்த கூட்டணியும் வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணியும் வெற்றி பெறவில்லை.
நயினார் நாகேந்திரன்
இதை அடுத்து அண்ணாமலை தான் அதிமுக பாஜக கூட்டணி உடைய காரணம் எனவும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டு இருந்தால் பெருவெற்றி பெற்றிருக்கலாம் என டெல்லிக்கு புகார்கள் பறந்தன. 2021 தேர்தல் மிக கடினமாக இருக்கும் என்பதால் அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என டெல்லி தலைமை விரும்பியது. அதிமுகவின் வலியுறுத்தல்படி அண்ணாமலை நீக்கப்பட்டு அதிமுகவிலிருந்து பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகுதான் தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல் வலுக்க தொடங்கியது.
பாஜக குழப்பம்
அண்ணாமலை பதவியில் இருந்த போது இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிரபலமாக தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் வார் ரூம் என்ற பெயரில் அண்ணாமலை புகழ் பாடும் ஒரு குழுவும் உருவானது. எதிர்க்கட்சித் தலைவர்களை தவிர்த்து சொந்த கட்சி தலைவர்களையே விமர்சிக்கும் அளவுக்கு அந்த குழு செயல்பட்டு வந்தது. இது தொடர்பாக டெல்லிக்கும் தகவல்கள் பறந்தன. இந்த நிலையில் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து அண்ணாமலை புறக்கணித்து வரும் நிலையில் சில நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பாஜக அதிமுக கூட்டணியை விமர்சித்து வந்தனர்.
ஜானி ராஜா
கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் எனவும், சமூக ஊடங்களில் கூட்டணி தர்மத்தை மீறி பதிவிடுபவர்களை நீக்க வேண்டுமென டெல்லி தலைமை உத்தரவிட்டது. இதை அடுத்து அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருவள்ளூரை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜானி ராஜா நீக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக ஒரு மீம் வெளியிட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுத்தார் நாகேந்திரன். இப்போது மட்டும் அல்ல இதற்கு முன்னதாகவே நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவர் கடுமையான பதிவுகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பைஜயந்த் பாண்டா
இதற்கிடையே டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆதரவாளர்கள் குறித்த ஒரு பெரிய பட்டியலையே டெல்லி தலைமையிடம் அளித்தார். குறிப்பாக பி எல் சந்தோஷ், தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா ஆகியோரிடம் இந்த பட்டியல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அந்த சமூக வலைதள குழுவினரை கண்காணித்ததில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் தமிழக பாஜகவினரையே விமர்சித்தது தெரிய வந்தது.
ஒழுங்கு நடவடிக்கை குழு
இந்த நிலையில் தான் அண்ணாமலை குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன். தமிழக பாஜக மாநில துணை தலைவரான சக்கரவர்த்தி தலைமையிலான குழுவில், பொருளாளர் எஸ்ஆர் சேகர், பொதுக்குழு இடம்பெற்றுள்ளனர். அதாவது சமூக வலைதளங்களில் அண்ணாமலை வார் ரூம் என்ற பெயரில் பாஜக தலைவர்களை விமர்சிப்பவர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அண்ணாமலை கட்சியை விட்டு சென்று விட்டதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் யூகங்கள் கிளம்பி வரும் நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்களை குறிவைத்து அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்..
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்












Click it and Unblock the Notifications