அண்ணாமலை போட்ட பால்.. திமுகவை தாக்காமல்.. மிஸ்ஸாகி அதிமுகவை தாக்க.. ஓ இதுதான் மேட்டரா?
சென்னை: திமுகவை தாக்க அண்ணாமலை பந்தை வீசினார், ஆனால் அந்த பந்து மிஸ்ஸாகி அதிமுகவை தாக்கி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதிமுக கூறிவிட்டது. விரைவில் கூட்டணிக்கான பணிகளை தொடங்குவோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த கூட்டணி முறிவிற்கு அண்ணாமலையின் பேச்சுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு, கூட்டணி முறிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அண்ணா - தேவர் இடையிலான மோதலை பற்றி பேசினால் திமுக அதற்கு பதிலடி கொடுக்கும். இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரிக்க முடியும் என்று அண்ணாமலை நினைத்தார். ஆனால் திமுக ஸ்மார்ட்டாக செயல்பட்டு இதை பற்றி பேசவில்லை. ஆனால் அதிமுக இதை பயன்படுத்தி பாஜக கூட்டணியை முறித்துள்ளது. இதை அண்ணாமலை நினைக்கவில்லை. திமுகவை தாக்க அண்ணாமலை பந்தை வீசினார்.
ஆனால் அந்த பந்து மிஸ்ஸாகி அதிமுகவை தாக்கி உள்ளது. குறுக்கே இந்த கவுசிக் வந்தா என்ன நடக்கும் என்பது போல குறுக்க அதிமுக வந்து ஆடி உள்ளது. திமுக - முக்குலத்தோர் வாக்குகளை பிரிக்கவே அண்ணா - தேவர் வாதத்தை பாஜக கையில் எடுத்தது. ஆனால் திமுக இதை ஸ்மார்ட்டாக எதிர்கொண்டு.. அண்ணா பெயரில் இயங்கும் அதிமுக இதை எதிர்க்கவில்லை என்று பந்தை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டனர். இதனால் அதிமுக ரியாக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கு அதிமுக ரியாக்ட் செய்ய பாஜக அதிமுக கூட்டணி உடைந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணியில் வலுவாக இருக்கும் பெரிய கட்சி அதிமுக. இப்போது அதிமுக வெளியேறியது என்டிஏ முறிவாக பார்க்கப்படுகிறது. அதிமுக மீது அமித் ஷாவிற்கு கோபம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக தயவு பாஜகவிற்கு தேவை. அதனால் இதுவரை ஆக்சன் எடுக்கவில்லை. இரண்டு பேருக்குமே திமுகவை வீழ்த்த வேண்டும். அதனால் இவர்கள் ஒன்று சேருவார்கள்.
இவர்கள் கூட்டணி சேர்ந்தால் கூட 2024ல் பெரிய பலன் இருக்காது. முக்கியமாக அதிமுகவிற்கு இருக்காது. 2026ல் கூட முதல்வர் பதவி கேட்பார்கள். அமைச்சகர்கள் இடம் கேட்பார்கள். பாதிக்கு பாதி சீட் கேட்பார்கள். ஆனால் ஒருவேளை அதிமுக தனியாக இருந்தால் 2026ல் அதிமுக வலிமையான தனி கட்சியாக இருக்கலாம். பாஜகவை எதிர்த்தால் அதிமுக மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால் அதிமுக அப்படி செய்யாது. அதிமுக அப்படி இறங்கி செல்லாது.
அதனால்தான் இந்த கூட்டணி உடைந்ததாக யாரும் நம்பவில்லை. மக்கள் கூட்டணி முறிந்ததாக நம்பவில்லை. கூட்டணி கட்சிகள் கூட கூட்டணி முறிந்ததாக நம்பவில்லை. தேர்தல் நேரத்தில் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது. எதிர்காலத்தில் வழக்கு வரலாம். அப்போதெல்லாம் பாஜக தயவு தேவை. அதனால் எடப்பாடி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார். ரெய்டுகளை எல்லாம் எதிர்கொள்ள அதிமுக துணியுமா என்பது சந்தேகம்தான்.
அதனால்தான் பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது. பாஜக தலைவர்களை பற்றி பேச கூடாது. தேவையின்றி இதில் கருத்து சொல்ல கூடாது என்று கூறியுள்ளார். மீண்டும் கூட்டணி சேர போகிறார்கள் என்பதால்தான் அதிமுகவினர் வாயை எடப்பாடி பழனிசாமி கட்டிப்போட்டு இருக்கிறார் என்று பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications