Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு வரவேற்பு.. ஆனா, தேர்தல் வாக்குறுதி 43ஐ படிக்கச் சொல்லும் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகள் மீதான குண்டாஸ் விலக்கிக் கொள்ளப்பட்டதை வரவேற்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மீண்டும் இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அடிக்கடை சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

 Annamalai to cm stalin after the revoke of goondas act on tiruvannamalai farmers

இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கைக்கு அதிமுக, பாஜக, அமமுக, நாதக என பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜக சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசு, விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக ஆகியோரின் தொடர் எதிர்ப்பை அடுத்து, குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டது வரவேற்கத்தக்கது.

 Annamalai to cm stalin after the revoke of goondas act on tiruvannamalai farmers

ஆனால் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேரை மட்டும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பதற்கான காரணங்கள் வியப்பூட்டும் வகையில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 43ஐ ஒருமுறை படித்துவிட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டுமே தவிர விவசாயிகளை குறை சொல்லக் கூடாது.

நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிக்கும்போது, நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டுவதை விட்டுவிட்டு, குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றிலும் தவறான போக்கு என்பதை, திமுக அரசு உணர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களைப் பயன்படுத்தாமல், பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுத்து வரும் திமுக அரசு, மீண்டும் இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+