அடுக்கிய அண்ணாமலை.. போட்டு கொடுத்த நயினார்! தமிழக தலைகளிடம் பஞ்சாயத்து பேசிய ’டெல்லி’.. பரபர பின்னணி
சென்னை: கடந்த வாரம் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை. அதில் தமிழகத்தில் பாஜக வலுவாக உள்ள தொகுதிகள், நயினார் நாகேந்திரனின் பயணம் கை கொடுக்காதது உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை தலைமையிடம் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் தனது ஆதரவாளர்களை திட்டமிட்டு தூக்கி வருவதை புகாராக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அண்ணாமலையின் புகார்களின் அடிப்படையிலேயே நயினார் டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகவும், அண்ணாமலை மீதான பல்வேறு புகார்களை ஆவணங்களோடு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடும் பரபரப்பில் இருந்த நேரத்தில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழக பாஜக குழப்பம்
சமீப காலமாக, "அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார்", "நயினார் நாகேந்திரனால் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்", போன்ற செய்திகள் பாஜகவுக்குள் பரவிய நிலையில், அவரது டெல்லி பயணம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் டெல்லி விசிட் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் கூறிய தகவல்களின்படி," கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள அண்ணாமலை நேரம் கொடுத்திருந்தார். திருப்பூருக்கு கிளம்ப தயாராக இருந்த நேரத்தில் தான், டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளது.
அண்ணாமலை டெல்லி பயணம்
அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் கிடைத்ததும், தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உடனடியாக டெல்லி புறப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே திருப்பரங்குன்றம் தொடர்பான போராட்டங்களில் அவர் நேரடியாக பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமித் ஷா
கூட்டத்தில் முதலில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் கட்சியின் அமைப்பு நிலை மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "அமைப்புரீதியாக பாஜக வலுப்பெற்று வருகிறது. ஆனால் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பூத் கமிட்டிகள் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. தற்போது 62 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதைய கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்" என்று கூறியதாக சொல்லப்படுகிறது
அண்ணாமலை
இதனைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஏன் பங்கேற்கவில்லை என பி.எல். சந்தோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நீங்கள் கொடுத்த பணிகளை முழுமையாக செய்து முடித்துள்ளேன். ஆனால், என் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கும்பகோணம் கூட்டத்திற்கு முன்பே கூட சிலர் நீக்கப்பட்டனர். இதைச் சொல்ல உங்களை தொடர்புகொண்டபோது அழைப்பே எடுக்கப்படவில்லை." என ஆதங்கமாக கூறியுள்ளார்.
அண்ணாமலை புகார்
"தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை கூட்டணித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளோம். இந்த சூழலில், உங்கள் ஆதரவாளர்கள் அவரை விமர்சிப்பது கூட்டணிக்கு பாதகமாக இருக்காதா" என்று ஜேபி நட்டா கேட்க, அதற்கு அண்ணாமலை, "நானே பல பேட்டிகளில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைப்பதற்காக உழைப்போம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறேன். உள்ளடி வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. திமுக ஐடி விங் சார்ந்தவர்கள் தான் என் ஆதரவாளர்கள் என்ற பெயரில் வதந்திகளை பரப்புகிறார்கள்" என விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பாஜக கூட்டணி
அனைத்து விவாதங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட அமித் ஷா, "நீங்கள் மாநிலத் தலைவராக இருந்தபோதும், தற்போது செய்துவரும் பணிகளும் எங்களுக்கு தெரியும். உங்களிடம் சில தவறுகள் இருக்கலாம், அதைத் திருத்திக்கொள்ளுங்கள். கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது. விரைவில் சென்னை வருகிறேன். அப்போது சிறு சமூக தலைவர்கள் மற்றும் இயக்க பிரதிநிதிகளை சந்திக்க இருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நீங்கள் மேற்கொள்ளுங்கள். நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக நியமித்ததற்கும் காரணம் உண்டு. உங்களுக்கான அங்கீகாரம் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமை
தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணங்கள் எதிர்பார்த்த அரசியல் எழுச்சியை ஏற்படுத்தவில்லை என்பதையும் டெல்லி கவனத்தில் எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அண்ணாமலையை மீண்டும் முன்வரிசைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நயினார் டெல்லி பயணம்
அண்ணாமலையைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் விரைவில் டெல்லி அழைக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அதுவும் நடந்துள்ளது. டெல்லி பாஜகவின் முக்கிய தலைகளை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் அண்ணாமலையின் புகார்கள் தொடர்பாக விரிவாக விளக்கம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தன்னைக் குறித்து கடந்த காலங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தற்போது விமர்சிப்பது குறித்து புகாராக அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பாஜக உட்கட்சி மோதல்
மேலும் தமிழக பாஜகவில் இதுவரை இல்லாத கலாச்சாரமாக தனிநபர் புகழ் பாடுவது, ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது என அண்ணாமலையின் ஆதரவாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் நயினார் நாகேந்திரன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை சொன்னதையும் நயினார் நாகேந்திரன் சொன்னதையும் எடை போட்டு பார்த்த பாஜக தலைமை விரைவில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர். அண்ணாமலையின் புகார்களின் அடிப்படையில் நயினார் டெல்லி சென்ற நிலையில், தற்போது அண்ணாமலை மீது நயினார் நாகேந்திரன் புகார்களை அடுக்கி இருப்பதாக சொல்கின்றனர் பாஜகவினர்.
-
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்










Click it and Unblock the Notifications