முடிஞ்சத பார்.. கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வன்மத்தோடு அலைந்தவர் அண்ணாமலை.. அதிமுக பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வன்மத்தோடு அண்ணாமலை சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், அண்ணாமலையின் நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது என ராஜ் சத்யன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்கள் தடித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, பாஜகவை தாக்கி பேச, அதற்கு அண்ணாமலை நரி கதை சொல்லி பதில் கொடுக்க, அவருக்கு அதிமுக தலைவர்கள் எதிர் வினை ஆற்ற என களம் பரபரக்கிறது.

Annamalai wanted to destroy AIADMK while he is in alliance says AIADMK IT WING Raj Satyan

இந்நிலையில், கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் அண்ணாமலை சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும் என அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூட்டணியில் இருந்தபோதே அஇஅதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள் சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும். மக்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் தோல்வி பயத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டி உள்ளீர்கள். திமுக இருந்தால் கூட பரவாயில்லை, அஇஅதிமுக அழியவேண்டும் என்று பொருள் பட பேசுகிறீர்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. நன்றி! இது தான் எங்களுக்கான Fuel. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் பெருங்கனவை நெஞ்சில் ஏந்திச் செல்லும் எங்களை, உங்களைப் போன்ற குள்ளநரி கூட்டத்தால் அசைத்துக் கூட பார்க்க முடியாது.

தமிழ்நாட்டுக்கு திமுக மட்டும் எதிரியல்ல. பிரிவினைவாதம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு அரசியல் செய்யும் உங்களை போன்ற அற்ப புத்தி கொண்ட கட்சிகளும் தான்! இப்படிப்பட்ட தீயசக்திகள் தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுக எனும் இயக்கம் கண்டனர். இன்று உங்களை எதிர்க்கும் இந்த பாதை பெரியாரின் பாதை- அண்ணாவின் பாதை- எம்ஜிஆரின் பாதை- ஜெயலலிதாவின் பாதை.

இது தமிழ்நாடு! எங்க நாடு! என் தாத்தன்- பூட்டன் இருந்து பார்த்து கட்டுன எங்க வீடு. எங்கிருந்தோ வந்த கரையான்களை இதை நாசமாக்க விடுவோமா? கொரோனாவில் இருந்து எங்கள் மக்களைப் பாதுகாத்த எங்கள் தலைவருக்கு, உங்களிடம் இருந்தும் மக்களை காப்பாற்றத் தெரியும் முடிஞ்சதைப் பார்.. ஆண்டவனே எங்க பக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+