தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலக்கப்பட்டாரா? எஸ்.வி.சேகர் சந்தேகம்! பாஜகவில் நடப்பது என்ன?
சென்னை: தமிழக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலையாக விலகவில்லை, அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் ஜரூராக பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பார்த்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும். இதனால் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு செய்தியை டெல்லி பாஜகவுக்கு அண்ணாமலை சொல்லாமல் சொல்லியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததே பிடிக்கவில்லை என்றும் வரும் தேர்தலில் அந்த கூட்டணியுடன் எப்படி வேலை பார்ப்பது என்பதால் அவர் விலகுகிறார் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் தமிழக பொறுப்பாளர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஸ்டன்ட் அடித்து பார்க்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எது உண்மை என தெரியவில்லை.
இந்த நிலையில் அண்ணாமலை விலகல் குறித்து எஸ்.வி.சேகர் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெறாது என்பது நயினார் நாகேந்திரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். அதனால் இவரை பொறுப்பாளராக அறிவித்த 6 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜக வெல்லாது என்பது தெரியும்.
மேலும் தனது தலைமையில் தமிழக பாஜக நிறைய இடங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயிக்கவில்லை என்கிற போது வேறு தலைவரான நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக வென்றுவிட கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை தவிர வேறு யாரும் வெல்லவே கூடாது என்ற எண்ணத்துடன் தேர்தல் பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெல்லாததற்கு காரணம் அண்ணாமலைதான்.
என்டிஏ என்பது முரண்பாடான கூட்டணி. கள யதார்த்தத்தை தெரியாமல் பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஒரு வேளை அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவார் என்றால் அது எனக்கு தெரியாது. அப்படியே தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியில்தானே போட்டியிட போகிறார், அதற்காக ஏன் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலக வேண்டும்?
அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் வெல்ல மாட்டார். அண்ணாமலை என்பவர் தற்போது ஜீரோதான். இவ்வாறு அண்ணாமலையை, எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
யாரை செருப்பால அடிக்கணும்? சீரியல் நடிகை லட்சுமி நறுக்குன்னு கேட்ட கேள்வி.. எஸ்வி சேகருக்கு பதிலடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது!












Click it and Unblock the Notifications