தூண்டிவிட்டதே அண்ணாமலைதான்.. 2 நாளில் பாருங்க.. பாஜகவை ஆட வைக்க போகும்.. எடப்பாடியின் திட்டம்!

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி தானே சொல்லி இருந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை தன்னை தானே தலைவர், பெரிய ஆள் என்று சொல்லிக்கொள்கிறார், அது பெரிய தவறு என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவினர் பலர் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அதற்காக நான் பயப்பட மாட்டேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன். பாஜக செட்டில் ஆகும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன், என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,, அண்ணாமலை தன்னை தானே தலைவர், பெரிய ஆள் என்று சொல்லிக்கொள்கிறார். அவரை தொண்டர்கள்தான் தலைவர் என்று கூற வேண்டும். தானே தலைவர் தலைவர் என்று சொல்லிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது. அவர்தான் தலைவரா? தலைவராக இருக்கும் யாரும் தன்னை தலைவர் தலைவர் என்று சொல்ல மாட்டார்கள். அதிமுகவில் இருந்து பலர் பாஜக சென்றுள்ளனர். பாஜகவில் இருந்த பலர் அதிமுக வெளியேறி உள்ளனர். திமுகவில் இருந்து கூட கட்சி மாறி உள்ளனர். இது எல்லாம் நடக்கிறது தானே? இதற்கு எல்லாம் கோபம் அடைந்து எப்படி அண்ணாமலை ஸ்டேட்மென்ட் கொடுக்கலாம்.

பேட்டி

பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி தானே சொல்லி இருந்தார். அப்படி இருக்கும் போது அண்ணாமலை இந்த பிரச்சனையின் போது எடப்பாடியிடம் போனில் பேசி இருக்கலாமே. நிர்மலை கண்டித்தேன். அதனால் அவர் அதிமுக வந்துவிட்டார். அவரை எடுத்துக்கொண்டது தவறு என்று அண்ணாமலை பேசி இருக்கலாம். அப்படி பேசி இருந்தால் பிரச்சனை தீர்ந்து இருக்கும். ஆனால் அதை அண்ணாமலை செய்யவில்லை. ஆனால் அண்ணாமலை அப்படி செய்யவில்லை.

சிவகங்கை

சிவகங்கை

11ம் தேதி சிவகங்கையில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. எடப்பாடி நடத்தும் இந்த பொதுக்கூட்டத்தில் பல நிர்வாகிகள் பாஜகவில் இருந்து அதிமுகவில் சேர போகிறார்கள். தென் மாவட்ட நிர்வாகிகள் பலர் கூண்டோடு அதிமுகவில் சேர போகிறார். அப்போது அண்ணாமலை என்ன செய்வார் என்று பார்க்கலாம். அண்ணாமலையின் ரியாக்சன் அப்போது எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். எடப்பாடியை உருவப்படத்தை எரித்து உள்ளனர். அண்ணாமலையின் தூண்டுதல் இல்லாமல் இதை செய்து இருக்க வாய்ப்பே இல்லை.

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி அந்த வார்த்தையை சொல்லி திட்டி இருக்கிறார். அமர் பிரசாத் அண்ணாமலைக்கு நெருக்கமானவர். அண்ணாமலைக்கு தெரியாமல் அவர் பேசி இருக்க வாய்ப்பே இல்லை. எதிர்காலத்தில் இவர்கள் எப்படி எடப்பாடியை பார்ப்பார்கள். அமர் பிரசாத் ரெட்டி தேர்தலில் நிற்க விருப்பப்பட்டால் எடப்பாடியிடம் போட்டி எப்படி இடம் கேட்க முடியும். கூட்டணியில் நீங்கள் நிற்க இடம் கொடுக்க மாட்டோம் என்று எடப்பாடி சொன்னால் என்ன ஆகும்? இவர்கள் எல்லாம் எப்படி எதிர்காலத்தில் சந்தித்துக்கொள்ள முடியும், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+