அண்ணாமலை எடப்பாடியை விட்டுக்கொடுக்க மாட்டார்.. ஓ இப்படி ஒரு காரணம் இருக்கா? சீக்ரெட்டை உடைத்த புள்ளி
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்காக பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கியமான டிமாண்ட் ஒன்றை வைப்பார், அதை அண்ணாமலையும் ஏற்றுக்கொள்வார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி, அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று கூறினார்.
மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
அதாவது பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறினார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பாஜகவை எதிர்க்கிறேன் என்று எடப்பாடி முதலில் தெளிவாக சொல்லவே இல்லை. அவர் எங்குமே தெளிவாக பாஜக எதிர்க்கவில்லை. தொலைக்காட்சி வாதங்களில் பேசும் நபர்கள் பாஜகவை எடப்பாடி எதிர்ப்பதாக சொன்னார்கள்.வாதங்களில் வேண்டும் என்றால் எடப்பாடி பாஜகவை கடுமையாக எதிர்க்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் எடப்பாடி என்றுமே நான் பாஜகவை எதிர்க்கிறேன், நான் அமித் ஷாவை, மோடியை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. எடப்பாடி எங்குமே வெளிப்படையாக இதை சொல்லவே இல்லை.

பாஜக மோதல்
சிவி சண்முகம் வேண்டும் என்றால் பாஜக - திமுக கூட்டணி வைக்க போவதாக சொல்லலாம்., ஆனால் எங்குமே அதிமுக அதிகாரபூர்வமாக பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிட்டதாக கூறவில்லை. சிவி சண்முகம் தான் தோல்வி அடைய சிறுபான்மை வாக்குகள் கிடைக்காமல் போனதுதான் காரணம் என்று நினைக்கிறார். இதனால் பாஜகவை எதிர்க்கிறார். ஜெயக்குமாரும் இப்படித்தான் பாஜகவை எதிர்க்கிறார். ஆனால் மற்றவர்கள் அதிமுகவில் பாஜகவை எதிர்க்கவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் யாரும் பாஜகவை எதிர்க்கவில்லை.

தங்கமணி
தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் பாஜகவை எதிர்க்கவில்லை. இதே நிலைப்பாட்டுடன்தான் அதிமுகவில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன். பாஜகவை எடப்பாடியும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அவருக்கும் கலவையான மனப்பான்மைதான் இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை எடப்பாடி கழற்றிவிட வாய்ப்பு இல்லை. அப்படி செய்தால் என்ன ஆகும் என்று எடப்பாடிக்கும் தெரியும். பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு எடப்பாடி நிற்க வாய்ப்பே இல்லை.

அடிப்படை ஊழல்
குறிப்பாக 2019 கூட்டணிக்கான அடிப்படை ஊழல் மட்டுமே. அந்த ஊழல் புகார்கள் காரணமாகவே எடப்பாடி தரப்பினர் பாஜகவுடன் சுமுகமாக போனார்கள். இப்போதும் விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு உள்ளது. எடப்பாடிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அதை எல்லாம் பாஜக நோண்ட ஆரம்பித்தது என்றால் எடப்பாடிக்குத்தான் சிக்கல். அதை எல்லாம் தோண்ட ஆரம்பித்தார்கள் என்றால் இவர்கள் யாராலும் நடமாடவே முடியாது. இவர்களுக்குத்தான் சிக்கல் ஏற்படும். அதனால் இவர்கள் பாஜகவை எதிர்க்க மாட்டார்கள்.

நடமாட முடியாத நிலை
பாஜகவை அதிமுக எதிர்த்தால், இவர்கள் யாருமே நடமாட முடியாத நிலை ஏற்படும். எடப்பாடி பழனிசாமி எங்கேயும் தெளிவாக பாஜகவை எதிர்ப்பதாக சொல்லவில்லை. மெகா கூட்டணி அமைப்போம் என்று சொன்ன போதும் பாஜகவை எதிர்ப்போம் என்று சொல்லவில்லை. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று கூறிய எடப்பாடி உடனே கூட்டணி பெயரை மாற்றி உள்ளார். அப்படி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், பாஜகவை எதிர்க்க எடப்பாடி துணியவில்லை என்பது எளிதாக தெரிகிறது. அதிமுகவும் சிறுபான்மையினர் வாக்குகளை பற்றி கவலைப்படவில்லை.

ஜெகதீஸ்வரன்
ஈரோடு கிழக்கிலும் அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறது. அதுதான் உண்மை. மக்களுக்கும் இது தெரியும். வெறுமனே மோடி புகைப்படத்தை பயன்படுத்தவில்லை என்பதற்காக கூட்டணி உடைந்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. மக்களுக்கு இவர்கள் கூட்டணியில் இருப்பது தெரியும். 2024 ல் எடப்பாடி பாஜகவுடன்தான் கூட்டணி வைப்பார். இந்த கூட்டணி வைக்க எடப்பாடியின் டிமான்ட் பொதுவாக.. எனக்கு இரட்டை இலையை கொடுங்கள். டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை ஒதுக்குங்கள் என்று எடப்பாடி சொல்லுவார். அதை அண்ணாமலை ஏற்றுக்கொள்வார். ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை வெல்ல வேண்டும் என்றால் எடப்பாடி தயவு தேவை. அதனால் பாஜக - அதிமுக கூட்டணி 2024ல் உடைய வாய்ப்பே இல்லை, என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications