பரம ஏழையாக வாழும் என் பாசக்கார அண்ணன் சீமான்.. கடற்கரை பங்களா வாடகை 3 லட்சம்..ராஜீவ் காந்தி ட்வீட்
சென்னை: பரம ஏழையாக வாழும் என் பாசக்கார அண்ணன் சீமான் அவர்களால் உயர்குடி பணக்கார்கள் மட்டுமே படிக்கும் 28 ஆயிரம் அரசு தமிழ்வழி பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பது கொஞ்சம் சிரமம் தான் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில், இந்த முறை மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சிலர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக், வேட்பு மனு தாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் பாண்டியன் ஓமன் நாட்டில் படித்தவர். அவருக்கு தமிழ் வரவில்லை. என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமாக இல்லை.
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும். என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.

என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம்" இவ்வாறு சீமான் கூறியிருந்தார். தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை இல்லை என்று கூறியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க வைக்கலாமே என்று கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,
"கடற்கரை பங்களா வீட்டு வாடகை 3 லட்சம் , 4 மகிழுந்து (CAR)
20 விமான பயணம்
5 சமையல்காரர்
5 தோட்ட வேலையாள்
10 பாதுகாவலர்
இரண்டு நேர உடற்பயிற்சி கூடம்!
வெளியூரில் தங்க 5 ஸ்டார் hotel
தினம் A2 நாட்டுமாட்டு பால்
சீமை வளர்ப்பு நாய் 2
ஆஸ்திரேலியன் கிளி என....
பரம ஏழையாக வாழும் என் பாசக்கார அண்ணன் சீமான் அவர்களால் .. உயர்குடி பணக்கார்கள் மட்டுமே படிக்கும் 28 ஆயிரம் அரசு தமிழ்வழி பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பது கொஞ்சம் சிரமம் தான்!!" என்று கூறியுள்ளார். இப்படி பதிவிட்ட ராஜீவ் காந்திக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications