Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.50000 லோன் தரும் பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம்.. பெண்களுக்கென சுயதொழில்! சூப்பர் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மூலம் பெண்கள் பெறும் பயன்கள் என்னென்ன? இந்த திட்டத்தில் இணைய பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருவது ஏன்? அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம், பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலைத் தொடங்கவும், மேலும் வளர்ச்சி அடையவும் தேவையான நிதியைப் பெறலாம். இந்த திட்டத்தில் இணைய தேவையான தகுதிகள், விதிமுறைகள் என்னென்ன?

இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும், தாங்கள் அடியெடுத்து வைத்துள்ள துறையில் சாதிக்க வேண்டும் என்று பெருத்த கவனத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது.. இதற்காகவே சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டி வருகிறது. இதற்காகவே எண்ணற்ற சலுகைகளையும் வழங்கி வருகிறது.

Annapurna scheme rs50000 debt women Central Government 50000 rupees Catering Business 50

குறிப்பாக, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.. இந்த திட்டத்தின்மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்க செய்கிறது..

பழங்குடியின பெண்கள்

ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை எடுத்துக் கொண்டால், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின பெண்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2015-ல் பிரதமர் மோடி துவக்கி வைத்த இந்த திட்டத்தில், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அரசு கடன் வழங்குகிறது. சிறு தொழில்கள் அமைத்து தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு கடன் வழங்கப்படுகிறது.

அதுபோலவே, உத்தியோகினி திட்டத்தை சொல்லலாம்.. இதில், பெண்களுக்கு சுய தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் வட்டியில்லாமல் வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. வட்டி மட்டுமேயில்லாமல், குறிப்பிட்ட தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது.

அன்னபூர்ணா யோஜனா

அந்தவகையில் அன்னபூர்ணா யோஜனா திட்டமும் பெண்களின் அபரிமிதமான ஆதரவை பெற்று வருகிறது. சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெண்களுக்கு இருந்தாலும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது இடர்பாடாக உள்ளது.. இப்படி சுயமாக தொழில் தொடங்க வழியில்லாத பெண்களுக்காகவே, மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டம்தான் அன்னபூர்ணா யோஜனா.

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான இந்த அன்னப்பூர்ணா திட்டம் மூலம், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்து, பாத்திரங்கள், சமையல் கருவிகள், குளிர்சாதனப்பெட்டி, உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்கி கொள்ளலாம்.

விண்ணப்பம் - கடனுதவி

இந்த சலுகையை பெற விரும்புவோர், ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், இந்திய பிரஜையாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக ஃபுட் கேட்டரிங் துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருந்தும் பெறப்பட்ட கடனை தவறாமல் திருப்பி செலுத்தி இருக்க வேண்டும்... அதேபோல, விண்ணப்பதாரர் திருப்திகரமான சிபில் ஸ்கோரை கொண்டிருக்க வேண்டும்.

தகுதிகள் - நிபந்தனைகள்

மேலும், இந்த தொழில் பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறிய அளவிலான தொழிலாக இருக்க வேண்டும். இந்த சுயதொழிலானது தொடங்கி குறைந்தது 1 வருடமாவது நிறைவடைந்திருக்க வேண்டும்.

இவையெல்லாம் இந்த திட்டத்தின் பொதுவான தகுதி என்றாலும், கடன் வழங்கும் நிறுவனம், தொழில் செய்யும் இருப்பிடத்தை பொறுத்து, தகுதி வரம்புகள் மாறுபடக்கூடும்.

இந்த வங்கிக்கடனை பெற விரும்பும் பெண்கள், எஸ்பிஐ வங்கியின் கிளைகளை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம். அல்லது SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்..

வங்கியில் கடன் தொகைக்கு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து நேரடியாகவே நீங்கள் ஓட்டல் வைக்கப்போகும் இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். பிறகு, நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை அனைத்தும் சரியாக இருந்தால், அடுத்த 2 நாட்களிலேயே உங்களது வங்கிக்கணக்கில் 50,000 டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.


கடன் தொகை - வட்டி விகிதம்

கடன்தொகை அப்ரூவல் கிடைத்ததுமே, முதல் தவணையை செலுத்த வேண்டாம்.. அதேபோல, கடன் தொகைக்கு எளிய தவணை முறையில் 36 மாதங்கள் உள்ளன. இந்த 3 வருடங்களுக்குள் 50,000 பணத்தை திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி போன்றவற்றை பொறுத்து வட்டி விகிதம் மாறலாம். இந்த கடனுதவி திட்டமானது, சுயமாக தொழில் ஆரம்பிக்க ஆர்வமில்லாத பல பேருக்கும், ஆர்வத்தை தந்து கொண்டிருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+