ஒர்க் ஃப்ரம் ஹோம்வாசிகளின் கவனத்திற்கு! சென்னையில் மின்வெட்டு.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சார தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் தொட்ட வெயில் ஏப்ரலில் கொழுந்துவிட்டு எரிந்தது. வழக்கமாக வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி போன்றவற்றில்தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஈரோடு, கோவை என கொங்கு மாவட்டங்களையும் வெயில் பதம் பார்த்தது.

தமிழகத்தில் அதிகபட்சம் வெளில் பதிவான மாவட்டங்களில் ஈரோடுதான் முதல் இடத்தில் இருந்தது. வெயில் காரணமாக பலரும் ஏசி, ஏர் கூலர் நோக்கி நகர தொடங்கினர். இதனால் தமிழகத்தின் மின் தேவை உச்சத்தை தொட்டது. தேசிய அளவில் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவு மின் தேவை ஏற்பட்டது.
மே 2ம் தேதி 20,830 மெகாவாட் அளவுக்கு தமிழகத்தின் மின் தேவை இருந்தது. மே முதல் வாரத்தில், தமிழகத்தின் மாலை நேர மின் தேவை 18,000 மெகாவாட் - 18,958 மெகாவாட் வரை உயர்ந்தது.
ஆனால் தற்போது கோடை மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை உருவாகியுள்ளது. எனவே, மாநிலத்தின் மின் தேவை 20% வரை குறைந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழகத்தின் மாலைநேர மின் தேவை 15,878 மெகாவாட்டாக இருந்தது. இது மே 17 அன்று 15,487 மெகாவாட்டாகக் குறைந்தது. மே 18 அன்று மின் தேவை 15,555 மெகாவாட்டாக இருந்தது, இதுவே மே 19 அன்று 13,663 மெகாவாட்டாகக் குறைந்தது.
இப்படி இருக்கையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரியில் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications