வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் 7000.. தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்! வெளியானது அறிவிப்பு
சென்னை: தீபாளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக பயணிகள் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏராளமான பயணிகள் காத்திருப்பில் உள்ளனர். எனவே 40 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
பண்டிகை காலம் என்று வந்துவிட்டாலே ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாகிவிடும். அதுவும் தீபாளிக்கு டிக்கெட் நிச்சயம் கிடைக்காது. இந்த முறையும், தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்தது. சென்னையிலிருந்து பெங்களூர் மார்கம், தஞ்சாவூர் மார்கம், கோவை, குமரி, திருவனந்தபுரம், எர்ணாக்குளம் என அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயில்களிலும் சுமார் 7000 பயணிகள் காத்திருப்பில் இருக்கின்றனர்.

எனவே இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதன்படி, அக்.25 முதல் நவ.5 வரை மொத்தம் 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக அக்.25 முதல் சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, குமரி, கோவை, திருவனந்தபுரம் வழித்தடத்திலும், சென்ட்ரலிலிருந்து மங்களூர், பெங்களூர், மைசூர் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக தீபாவளிக்கு முந்தைய தினத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அக்.29 மற்றும் நவ.5 ஆகிய தேதிகளில் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல அக்.30ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர மங்களூருக்கு நவ.2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரை பொறுத்தவரை, அக்.30 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவற்றை தவிர, கொச்சுவேலி-பெங்களூர், சென்னை-அகமதாபாத் போன்ற வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், நெல்லை, கோவை மற்றும் தஞ்சை வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தஞ்சை வழித்தடத்தில் திருவாரூருக்கு நாளொன்றுக்கு இரண்டு ரயில்கள் மட்மே இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் வடமாநிலத்திலிருந்து வரும் ரயில்கள் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், டிக்கெட் எளிதில் கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல சென்ட்ரலிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலின் பயண நேரம் அதிகம் என்பதால், எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications