மாணவர்களுக்கு “ஜாக்பாட்”.. முன்கூட்டியே கோடை விடுமுறை.. முழு ஆண்டு தேர்வை விரைவாக முடிக்க திட்டம்!
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதியும் தொடங்கியது. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது.
ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை, திட்டமிட்டதை விட முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில், புதிய அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி உடன் முழு ஆண்டுத் தேர்வுகள் நிறைவடையும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே தங்களது தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு கோடை விடுமுறைக்குச் செல்ல இருக்கின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications