திமுக அமைச்சர்கள் 2 பேர் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் துரைமுருகனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகனுக்கு வயது மூப்பின் காரணமாக, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால், அவர் மருத்துவமனை சென்று அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் இருந்த நிலையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications