அடுத்த அதிர்ச்சி! காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி! வீடு புகுந்த இளைஞர் செய்த கொடூரம்! சென்னையில் பகீர்
சென்னை: பரங்கிமலை ரயில் நிலைய கல்லூரி மாணவி கொலையை போலவே மற்றொரு இளைஞர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகள் சத்யப்பிரியா. 20 வயதான இவர், தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
தினசரி மின்சார ரயில் மூலம் மாணவி சத்யப்பிரியா கல்லூரி சென்று வந்தார். இதற்கிடையே நேற்று முன் தினம் இவர் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

பரங்கிமலை ரயில் நிலையம்
அதாவது சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் சத்யப்பிரியாவை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யப்பிரியாவிடம் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். தகராற்றில் ஈடுபட்டு சதீஷ், மாணவியை ரயிலில் தள்ளிக் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து துரைப்பாகத்தில் பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.

உலுக்கிய மரணங்கள்
தனது மகள் சத்யப்பிரியா மரணத்தைக் கேட்டு மனமுடைந்த அவரது தந்தை மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே சில நாட்களில் சென்னையில் மீண்டும் இதேபோன்ற ஒருதலை காதல் காரணமாகப் பிரச்சினை நடந்துள்ளது.

மற்றொரு ஷாக் சம்பவம்
சென்னை சூளைமேடு பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் பெண்ணின் மகள் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். 18 வயதே ஆன அந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர் ஒரு தலையாகக் காதலித்து வந்து உள்ளார். இருப்பினும், கல்லூரி மாணவி இந்த ஒரு தலைக்காதலை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில் முன்தினம் அவர்கள் வீட்டிற்குள் ரஷீத் திடீரென புகுந்துள்ளார்.

மறுப்பு
கல்லூரி மாணவியைக் காதலிப்பதாகவும் எப்போதும் அவர் பின்னாலேயே சுத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், அவர் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரஷீத் கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியும் அவரது தாயும் இதைப் பார்த்துப் பயந்துவிட்டனர். இருப்பினும் ரஷீத் ரகளை செய்தும் அவர் கூறியதை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

கொலை மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த ரஷீத் அவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அஞ்சிய அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ரஷீத் தப்பியோடி விட்டார். மேலும் எப்படியாவது மாணவி கழுத்தில் தாலி கட்டுவேன் என்றும் இல்லையென்றால் நிச்சயம் ஒரு கொலை விழும் என்று ரதீஷ் மிரட்டிச் சென்று உள்ளார். இதைக் கேட்டு தாயும் மாணவியும் பயந்து போனார்கள்.

கைது
இது தொடர்பாக மாணவியின் தாயார் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார், ஒரு தலை காதல் என்ற பெயரில் தனியாக இருந்த தாய்- மகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிய சைக்கோ இளைஞர் ரஷீத்தை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications