தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்றும் ஒருவர் பலி.. புதிதாக 519 பேருக்கு தொற்று பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3, 676 ஆக உள்ளது. மேலும் இன்று ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் .

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்பட அரியானா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தனித்தனியே நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

Another person died due to corona virus in Tamil Nadu, 519 new people have been infected

இந்தக் கடிதத்தில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு 500 க்கும் மேல் பதிவாகி வருகிறது. நேற்று தொற்று பாதிப்பு 528 ஆக பதிவான நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 250 ஆண்கள் மற்றும் 269 பெண்கள் உள்பட 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியமாக அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், கோவையில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 2 பேர் உள்பட மொத்தம் 35 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 502 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3, 676 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று நாமக்கல்லில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+