"வாட்ஸ் அப்பில் சாட்டிங்.. தொல்லை கொடுத்தார்" பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் புகார்
சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பெனடிக் ஆன்றோ இளம்பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடந்த சில வாரங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுமாக இருந்தது.

பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று வந்ததும் அங்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தியதும் அவர்களையும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீது அளித்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானர். அவரை தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை கைது செய்தனர். பாளையங்க்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 2022 ஆம் ஆண்டு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்தேன். ஆனால், அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதனால், நான் சாட்டிங் எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டேன். எனினும் எனக்கு தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தொல்லை கொடுத்து வந்தார்" என்று கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications