குரூப்-2ஏ தேர்வில் முதல்வர் குறித்த வினாவுக்கு விடை குறிப்பு வெளியாகவில்லை.. விடையே வராத 5 கேள்விகள்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 'குரூப்-2ஏ' பொது தமிழ், பொது அறிவு பாடத்துக்கான முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. இந்த குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 29,809 பேர் தகுதி பெற்றனர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அறிவிக்கப்பட்ட போதும் குரூப்-2ஏ தேர்வில் முதல்வர் குறித்த வினாவுக்கு விடை குறிப்பு வெளியாகவில்லை.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் 2 ஏ நிலையிலான 2540 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர்(கிரேடு 2) என 534 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல் குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் 273, காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து உதவியாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 29,809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. காலையில் மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடந்தது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாள்I தமிழ்மொழி தகுதி தேர்வு நடந்தது. பொது அறிவு தேர்வை 21,563 பேரும், பொதுத்தமிழ் தேர்வை 16,457 பேரும், பொது ஆங்கிலம் தேர்வை 5,106 பேரும் எழுதினார்கள். தமிழ்மொழி தகுதி தேர்வை 21,607 பேர் எழுதினார்கள். அவர்களுக்கு, குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வு கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான உத்தேச விடைப்பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதில், பொது அறிவுத்தாளில் 5 கேள்விகளும், பொது ஆங்கிலத்தில் ஒரு கேள்வியும் நிபுணர் குழுவின் முடிவுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. அதேநேரம் குரூப்-2 ஏ தேர்வு நடைபெற்ற அன்றே அதில் கேட்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தொடர்பான கேள்வி வெகுவாக பேசுபொருளானது. 'தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதல்வரை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர்' என்ற வினா கேட்கப்பட்டு, அதற்கு 'பள்ளியில் காலை உணவு திட்டம், விடியல் பயண திட்டம், நீங்கள் நலமா?, மக்களுடன் முதல்வர், விடை தெரியவில்லை' ஆகிய 5 பதில்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் எந்த பதில் சரியானதோ, அதை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில், இந்த வினாவுக்கு 'பள்ளியில் காலை உணவு திட்டம்' என்பதே சரியான விடையாக இருக்கும் என்று தேர்வர்களும், பல்வேறு பயிற்சி மைய ஆசிரியர்களும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட விடைக்குறிப்பில், அந்த வினாவுக்கு, விடைக்குறிப்பு வெளியாகவில்லை..
'இந்த கேள்வி மற்றும் விடை இறுதி முடிவுக்காக வல்லுநர் குழுவின் முன் வைக்கப்பட உள்ளதாக' அந்த விடைக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வினா எண் 4, 70, 88, 112, 129 மற்றும் பொது ஆங்கிலத்தில் வினா எண் 145 ஆகியவையும் வல்லுநர் குழுவின் முன் வைக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு விடைக்குறிப்புகளை அறிய முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications