ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..10 இடங்களில் ரெய்டுக்கு காரணம் என்ன?
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில்,தமிழ்நாட்டில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய மலர்விழி, 2015-17 ஆம் ஆண்டு சிவகங்கை கலெக்டராக இருந்தார். மலர்விழி 2001ல் குரூப்-1 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு சென்னையில் வணிகவரித் துறையில் இணை ஆணையராக பணியாற்றினார், அவருக்கு ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்தது. ரூ.40 மதிப்புள்ள ரசீது புத்தகத்தை ரூ.135க்கு வாங்கியதில் மொத்தம் ரூபாய் 1.32 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் ஆட்சியர் மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள தாய்சா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இரண்டு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ரூ.1.32 கோடி கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கிருஷ்ணன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.
கிரசண்ட் நிறுவன உரிமையாளர் தாகீர் உசேன், நாகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீரையா, பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications