எழிலகம் நீர்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. ரூ.2 லட்சம் பறிமுதல்
சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் அலுவலகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விடிய விடிய சோதனை நடத்தினர். ரூ. 2லட்சம் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் உதவி செயற்பொறியாளரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைகளுக்கு சொந்தமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் உதவி செயற்பொறியாளராக பாஸ்கரன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஒப்பந்ததாரரின் பதிவுகளை புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக பாஸ்கரன் மீது புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் நேற்றிரவு எழிலகம் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக பாஸ்கரன் அறைக்குள் நுழைந்தனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாஸ்கரனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications