தமிழ் எங்கள் மானம்! இந்தித் திணிப்பு அவமானம்! ஆர்ப்பாட்டத்திற்கு கர்ஜித்து களமிறங்கும் வைரமுத்து!
சென்னை: இந்தித் திணிப்பை கண்டித்து கவிப்பேரரசு வைரமுத்து நாளை சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம் என்ற கர்ஜனை முழக்கத்துடன் களமிறங்கும் வைரமுத்து இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.ி

அமித்ஷா பரிந்துரை
அலுவல் மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமித் ஷாவின் பரிந்துரைகள் இந்தியை திணிக்கும் வகையில் இருப்பதக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதனிடையே அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக அண்மையில் தமிழக சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தித் திணிப்பு
ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு பதிலீடு செய்வது என்று திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். இதேபோல் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் வெகுண்டெழ ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தித் திணிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

களமிறங்கும் வைரமுத்து
இந்த ஆர்ப்பாட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவும் களமிறங்கி இந்திக்கு எதிராக கர்ஜிக்க உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம் என்றும் வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழ் எங்கள் அதிகாரம், இந்தித் திணிப்பு சர்வாதிகாரம் எனவும் கூறியுள்ள அவர் இந்த முழக்கம் எட்டுத் திசையும் எட்டட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தேன் சொட்டும் தமிழ்
வான்முட்டும் ஓசை தேன் சொட்டும் தமிழுக்கு காப்புக் கவசம் கட்டட்டும் என்று கூறியுள்ள வைரமுத்து துடித்துக் கிடக்கும் தமிழர்களே ஆர்ப்பாட்டத்துக்கு வெடித்துக் கிளம்புங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். வைரமுத்துவுடன் மேலும் பல கவிஞர்கள், பாடலாசிரியர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications